எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அகமதாபாத் ஜன 30 ம.பி. தேர்தலில் ஆதாயம் அடைவதற்காக குஜராத்தின் கோடைக்கால சாகுபடிக்கு  நர்மதா ஆற்றில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று அம்மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது. இதனால் மேற்கு மற்றும், மத்திய குஜராத் உள்ளிட்ட 27 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு  சட்டப் பேரவைத்  தேர்தல் நடக் கவுள்ளது. நர்மதா ஆற்றின் பெரும்பாலான நீரை தேர்தல் நடக்கும் மத்தியப் பிரதேச விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் குஜராத் விவசாயிகளுக்கு தண்ணீரை விடாமல் திசை திருப்பியுள்ளது. பாஜக அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்று குஜராத் விவசாயிகள் குற்றம் சாட்டி யுள்ளனர்.

கேது சமாஜ் என்ற விவசாயிகள் அமைப்பின் பொதுச் செயலாளர் சாகர் ராபரி முதல்வர் விஜய் ரூபனிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "கோடைக் கால சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட இயலாது என்ற அறிவிப்பு விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்தார் சரோவர் அணையில் ஏற்பட்ட நீர்ப் பற்றாகுறை தான் இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரம்பி வழிந்த அணையின் நீர் எப்படி பற்றாகுறையானது. அப்படி என்றால் அணை யில் இருந்த நீர் என்ன ஆனது?. செப்டம்பர் மாதமே அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அப்போது அணை யின் பல பகுதிகள் மூழ்கியிருந்தன.

அப்படி இருந்த சூழ்நிலையில் நீர் எப்படி குறைந்தது?. தங்களது பங்கு நீர் என்ன ஆனது? அது எதற்காக பயன்படுத் தப்பட்டது? என்று அறிந்து கொள்ளும் உரிமை விவசாயிகளுக்கு உள்ளது. தேர் தலுக்கு முன்பு இருந்த தண்ணீர், தேர்தல் முடிந்த பின்னர் எப்படி இல்லாமல் போனது? சட்டவிரோதமாக தொழிற்சாலை களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டை மாநில அரசு மறுத்துள்ளது. தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் சட்டவிரோதமாக வழங்கப்பட வில்லை. தொழிற்சாலைகளுக்கும் மார்ச் 15ஆம் தேதி முதல் தண்ணீர் வழங்கப்பட மாட்டாது என்று தலைமைச் செயலாளர் ஜே.என்.சிங் தெரிவித்துள்ளார்.

எனினும், வியாபம் ஊழல், மாண்டசூர் விவசாயிகள் போராட்டம் போன்ற காரணத்தால் மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் தலைமையிலனா பாஜக அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனால் தேர்தலை மனதில் வைத்து விவசாய திட்டங்களை அதிகளவில் சிவ்ராஜ் சிங் அறிவித்து வருகிறார். மேலும், கோடை காலத்தின் அங்கு கடும் வறட்சி நிலவும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. குஜராத்தில் அப்போது வானிலை நன்றாக இருக்கும் என்று பாஜக கருது கிறது.

அதனால், மத்தியப் பிரதேச தேர்தலை கணக்கிட்டுத் தான் நர்மதா ஆற்று நீரை அங்கு விவசாயத்திற்கு அதிக அளவில் பயன்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அங்கு சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது ஆதாயம் அடையும் வகையில் குஜராத் மக்களின் தாகத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்று பாஜக திட்டமிட்டுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


நறுக்....

பேருந்துக் கட்டண உயர்வால் இர யில்வேக்கு கடந்த ஏழு நாட்களில் 1.96 கோடி ரூபாய் உயர்வு!
(இதில்கூட மத்திய பிஜேபி அரசுக்கு மறைமுகமாக உதவும். அஇஅதிமுக அரசின் கப்பம் கட்டும் சேவகமோ சேவகம்!)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner