எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

போபால், ஜன.30 மத்தியப் பிரதேச கல்வி நிறுவனத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் நான் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டேன், பாஜக செயற்பாட் டாளரை ஆதரிக்க மாட்டேன் என மாணவர்கள் உறுதி மொழியேற்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலா னது பாஜகவினரை அதிர்ச் சிக்குள்ளாக்கியிருக்கிறது.

மத்தியப்பிரதேசம் இட் டார்சி விஜயலட்சுமி தொழிற்பயிற்சி நிலையத்தில் குடியரசு தினத்தையொட்டி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது அணி வகுத்து நின்ற மாணவர்கள், நான் பாஜகவுக்கு வாக்க ளிக்க மாட்டேன், பாஜக செயற்பாட் டாளரை ஆதரிக்க மாட்டேன் என கைகளை முன்பக்கம் நீட்டி உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அய்டிஅய் தேர்வு களை ஆன்லைனில் நடத்தும் அரசின் முடிவைமாற்ற வேண் டும் என மாணவர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்காக மட் டுமல்லாது பாஜகவுடன் எவ் விதத்திலும் ஒத்துழைக்க முடியாது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பாஜகவின் வன்முறை குறித்து மாவட்டத் தில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner