எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருமலையில் 20 முதல் 25 செக்ஸ் மய்யங்கள் இயங்கி வருகின்றன. இதில் 400 விபச்சார அழகிகள் உள்ளனர். இங்கு எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மே மாதம் திருப்பதியில் 7604 ஆண்களிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களில் 268 பேருக்கு எச்.அய்.வி. கிருமி தொற்றியிருப்பது தெரிய வந்துள்ளது என்று செய்தி வெளியிட்ட தினத்தந்தி (சென்னை பதிப்பு 21.6.2008, பக்கம்: 17) மேலும் கூறுகிறது.

திருப்பதிநகரில்மட்டும்3500 அழகிகள்விபச்சாரத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் கார ணமாக, திருப்பதிக்கும், திருமலைக்கும் வரும் பக்தர்களிடம் எய்ட்ஸ் நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, கருநாடக மாநில எல்லைப் பகுதிகளில் இடம் பெயர்ந்து வேலை பார்க்கும் கட்டடத் தொழிலாளர்கள்தான் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற இன் னொரு தகவலும் வெளியாகி இருக்கிறது.

எஸ்ட்ஸ்தடுப்புஅதிகாரிவெளி யிட்ட தகவலும், அது தொடர்பான புள்ளிவிவரங்களும்,ஆந்திர மாநில டி.வி.சேனல்களில் ஒளிபரப்பானது. சில சேனல்கள் கூடுதல் தகவல்களைச் சேகரித்துவெளியிட்டன.இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச் சிக்குள்ளாயினர் என்றும் இதற்கிடையே ஆந்திர மாநில எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி சந்திரவதனனுக்கு ஆந்தி மாநில பாரதீய ஜனதா, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன என்ற தகவல்களை விலாவாரியாக தினத்தந்தி வெளியிட்டுள்ளது.

இதனைப்படித்தால் அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. எய்ட்ஸ் தடுப்பு அதிகாரி தன் கடமையைத்தான் செய்துள்ளார். அவரொன்றும் இந்துமத விரோதியும் அல்லர்.

ஓருண்மையைச் சொல்லியதற்காக அவரைப்பார்த்து உறுமுவதில் அர்த்தம் இருக்க முடியுமா? தம் கடமையை ஒழுங்காகச் செய்த ஓர் உயர் அதிகாரி மீது பாய்ந்து பிராண்டுவதில் பக்தி இருக்கலாமே தவிர பகுத்தறிவு இல்லை.

பொதுவாக கோயில் நகரங்களில் பால்வினை நோய்கள் அதிகம் என்பது இதற்கு முன்பும்கூட அதிகாரபூர்வமாக வந்துள்ள தகவல்கள்தாம். “ஹி.றி. ஜிணிவிறிலிணி ஜிளிகீழிஷி  ஹிழிஞிணிஸி கிமிஞிஷி ஜிபிஸிணிகிஜி” என்ற தலைப்பில், ‘தி பயோனிர்' ஏடு (21.7.1997) விரிவாக வெளியிட்டதுண்டு.

சுவிட்சர்லாந்து அரசின் சார் பாக அனுப்பப்பட்ட குழு ஒன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புனித கோயில்கள் என்று சொல்லப்பட்ட காசி, ரிஷிகேஷ், அலகாபாத் முதலிய இடங்களுக்குச் சென்று நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது.

ரிஷிகேஷில் 28 பேர்களும், காசி யில் 11 பேர்களும், அலகாபாத்தில் 19பேர்களும்,லக்னோவில்16பேர் களும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட் டிருந்தனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

சென்னையில் 12.6.1976 மற்றும் 13.6.1976 ஆகிய இரு நாட்களில் பாலியல் நோய் பற்றி ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை பொது மருத்துவமனையின் பாலியல் நோய்த் துறை இயக்குநர் டாக்டர் சி.என்.சவுமினி அக்கருத்தரங்கில் கூறிய தகவல், புண்ணியத்தலங்களின் புண்பட்ட யோக்கியதையை வெளிப்படுத்தக் கூடியதாகும். பக்தர்கள் அடிக்கடி கூடும் புண்ணியத் தலங்களில்தான் விபச்சாரம் பெரிய அளவில் நடக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள விபச்சாரி மூலம் சராசரி மூன்று பேர்களுக்கு இந்தநோய் பரவுகிறது.

இவற்றையெல்லாம்எடுத்துக்கூறு வதற்குக்காரணம்திருவாளர்எஸ்.குரு மூர்த்தி அய்யர்தான். துக்ளக்கில் (24.1.2018, பக்கம் 37) அவர் எழுதியது தான்.

“ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகமான மக்கள் சபரிமலைக்கு போக விரதம் இருப்பதால் சாராய வியாபாரம் குறைகிறது என்று கூறியிருக்கிறார். பகுத்தறிவு இதைச்செய்ய முடியாது. பகுத்தறிவுப் பகலவர்கள் வீரமணி போன்றவர்கள்இதைசாதிக்க முடியாது'' என்று எழுதியிருக்கிறார். சந்திரபாபு நாயுடுவின் திருப்பதி கதையே இந்த ஒழுக்கத்தில் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டத்தான் இந்த எடுத்துக் காட்டுகள்.

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner