எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, பிப்.1 சுதந்திர இந்தியாவில் முதன்முதலாக இந்தியில் மத்திய அரசு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது.  எப்போது மில்லாமல் திடீரென்று இந்த ஆண்டு அருண்ஜேட்லி இந்தியில் வரவு- செலவு திட்டத்தை அறிவித்தார். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அமைந்த இந்த இந்தி பட்ஜெட் உரையின் காரணமாக இந்தி பேசாத மாநில ஊடகங்கள் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொள்ளாமல் திகைத்து நிற்கும் நிலை ஏற்பட்டது.

மத்தியில் பாஜக அரசு அமைந்தது முதல் இந்தி மற்றும் சமஸ் கிருதத்தை திணிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டி வருகின்றது. இந்தி பேசாத மக்கள் மீது இந்தியைத் திணித்து ஒரே தேசம், ஒரே மொழி என்ற முழக்கத்தை முன்னெடுக்கிறதாம் பாஜக.இதற்கு பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இதுவரை மொழிப் போர் நடத்தாத கருநாடகா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்கள் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தன. ஆனாலும் இந்தியைத் திணிப்பேன்; சமஸ்கிருதத்தைத் திணிப்பேன் என கங்கணம் கட்டிக் கொண்டுதான் இருக்கிறது பாஜக. இந்த பாஜக அரசின் கடைசி முழுமையான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண்ஜேட்லி இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டையும் கூட அருண்ஜேட்லி இந்தியில் வாசிப்பேன் என்று கடைசி நேரத்தில் அறிவித்தார். இதனால் இந்தி மொழி பெயர்க்கும் வகையில் தயாராக இல்லாத இந்தி மொழி பேசாத மாநிலங்கள் அதிர்ச்சி அடைந்தன.

விமர்சனங்களில் இருந்து திசை திருப்பவே...

இந்தி மொழி பொதுவாக பட்ஜெட் முடிந்த பிறகு அனைத்து அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் பட்ஜெட் குறித்து விவாதம் செய்வர். இம்முறை தங்களது தோல்விகள் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், ஏற்கெனவே அறிவித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேறாத நிலையில் புதிய அறிவிப்புகளை மக்கள் ரசிக்க மாட்டார்கள்.  ஆகையால், பட்ஜெட்மீது கடுமையான விமர்சனங்கள் வரும். இத்தகைய விமர்சனங்கள் உடனே எழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தியில் பட்ஜெட்டை வாசிக்க அருண்ஜேட்லி மோடி கூட்டணி இந்தியில் பேசி இதனை முதன்மை விவாதமாக கொண்டுவந்து மற்றவற்றை பின்னுக்குத்தள்ளும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner