எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எங்களுடைய ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது

உ.பி. பா.ஜ.க. ஆட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்

பாலியா, பிப்.1 உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஓம் பிரகாஷ் ராஜ்பார், மாநிலத்தில் தற்போது நடந்து வரும் ஆட்சியின்கீழ் ஊழல் அதிகரித்துவிட்டது என கூறியது யோகி ஆதித்யநாத் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி.யில் பாரதீய ஜனதா ஆட்சியில் அங்கம் வகித்து உள்ள சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியின் தலைவர் பிரகாஷ் ராஜ்பார் பேசுகையில், இப்போதைய ஆட்சியின் கீழ் எங்களுடைய கட்சிக்கு மரியாதையும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார். சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சியுடன் ஒப்பிடும் போது இப்போது பாரதீய ஜனதா ஆட்சியின் கீழ் ஊழல் அதிகரித்துதான் உள்ளது. இந்த அரசில் நான் பங்கு பெற்று இருந்தாலும், இது எங்களுடைய அரசு கிடையாது.

நாங்கள் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்து உள்ளோம், என பிரகாஷ் ராஜ்பார் பிடிஅய்க்கு பேட்டியளித்து உள்ளார். பாரதீய ஜனதா ஆட்சியில் எங்களுடைய கட்சிக்கு மதிப்பு கிடையாது என கூறி உள்ள பிரகாஷ் ராஜ்பார், இவ்விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் பேசியுள் ளேன், என கூறி உள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா? என்ற கேள்விக்கு பிரகாஷ் ராஜ்பார் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்க வேண்டுமா? வேண்டாமா என்பது பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தது. பாரதீய ஜனதா எங்களுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்றால் நாங்கள் தனியாக போட்டி யிடுவோம்,என்றார். 403 உறுப்பினர்கள் கொண்ட உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சிக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.கடவுள் சக்தி இவ்வளவுதான்!

கோவிலுக்குச் சென்று திரும்பிய  மூன்று பேர் சாவு

ஓசூர், பிப்.1 கேரளாவில் உள்ள, குருவாயூர் கோவிலுக்குச் சென்று திரும்பியபோது, லாரிமீது கார் மோதிய விபத்தில், மருத்துவர் இணையர் உட்பட, மூன்று பேர் இறந்தனர்.

கருநாடக மாநிலம், பெங்களூரு, கங்கா நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (70). இவரது மனைவி அம்புஜம் (63). மருத்துவர் களான இவர்கள் இருவரும், மருத்துவமனை நடத்தி வந்தனர்.

கேரளா மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோவிலுக்குச் சென்று விட்டு, ‘ஹுண்டாய் அசன்ட் விவா’ காரில் பெங்களூருவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஓட்டுநர் பைஜு ஆப்ரகாம் என்பவர் காரை ஓட்டிச் சென்றார். தமிழக எல்லையான, கிருஷ்ணகிரி அடுத்த சூளகிரி அருகே உள்ள கொல்லப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில்,  அதிகாலை, 3.15 மணிக்குக் கார் சென்று கொண்டிருந்த போது, திருச்செங்கோட்டில் இருந்து ஓசூருக்கு தேங்காய் ஓடுகளை ஏற்றியபடி, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில், கார் மோதியது.

இதில், காரின் முன்பகுதி முழுவதும் சேதமாகி, ஓட்டுநர் பைஜு ஆப்ரகாம், ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி அம்புஜம் ஆகியோர், சம்பவ இடத்திலேயே இறந்தனர். சூளகிரி காவல் துறையினர், உடல்களை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப் படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.

விபத்து நேரிட்டால் எந்தக் கடவுளும் காப்பாற்ற வராது என்ற உண்மையை பக்தர்கள் உணரவேண்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner