எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரசியலில் ஈடுபடப் போகிறார் சினிமா நடிகர் ரஜினிகாந்த். அனேகமாகக் குதித்தே விட்டார். அவராகக் குதிக்கிறாரா? அல்லது குதிக்க வைக்கப் போகிறாரா என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

இன்றைக்கு அவரைச் சுற்றி மொய்ப்போர் யார்? ஆன்மிக அரசியல் என்ற ஒன்று ரஜினி மூளையில் தோன்றிற்றா? அல்லது தோற்றுவிக்கப்பட் டுள்ளதா என்பது முக்கியமான கேள்வி.

ரஜினியுடன் சேர்ந்து விஜய காந்தை கட்சி ஆரம்பிக்க ஜெயேந்திர சரஸ்வதி கூறி யதை ('குமுதம்' பேட்டி - 18.1.2001) இந்த நேரத்தில் நினைவு கூர்ந்தால் ரஜினியின் ஆன்மிக அரசியல் காஞ்சி சங்கர மடத்தில் கருத்தரித்தது என்பதை விளங் கிக் கொள்ளலாமே!

என்னதான் இருந்தாலும் ரஜினிகாந்த் சூத்திரன் தானே!  இன்றைக்குத் தூக்கிச் சுமக்கும் ஆரியம், கொஞ்சம் அவாள் நோக்கிலிருந்து வேறு அடி எடுத்து வைத்தால் தீர்த்துக் கட்டி விடுவார்களே! (காந்தியா ருக்கு என்ன நடந்தது என்பதை இந்த நேரத்தில் உள்வாங்கிக் கொள்க!)

ஒரே ஒரு நிகழ்ச்சியை எடுத்துக்காட்டினால் ரஜினிக்குப் போதுமானதாக இருக்கும்.

இயேசு கிருஸ்துவின் பன்னி ரெண்டு சீடர்களுள் ஒருவரான புனித தோமையார் பற்றி சென்னை மயிலாப்பூரில் உள்ள கத்தோலிக்க கிருஸ்துவ மறை வட்டம் ரூ.100 கோடி செலவில் திரைப்படம் எடுக்கப் போவதாக ஒரு செய்தி. அதில் திருவள்ளு வராக நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக இந்து முன்னணி தலைவர் திருவாளர் இராம. கோபால அய்யர்வாள் கேள்விப் பட்டாராம் - அடேயப்பா! ஆகா யத்துக்கும், பூமிக்கும் தாவிக் குதித்தாரே பார்க்கலாம்.

"இயேசுவின் சீடரான புனித தோமையார் இந்தியாவுக்கு வரவேயில்லை. அவர் சென் னைக்கு வந்தார், திருவள்ளு வரை சந்தித்தார், பரங்கிமலை யில் நரபலி ஆசாமிகளால் கொல்லப்பட்டார் என்பதெல் லாம் கட்டுக்கதை" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் ('குமுதம் ரிப்போர்ட்டர்' - 17.7.2008).

அடுத்து அப்படத்தில் திரு வள்ளுவராக நடிப்பதாகக் கேள் விப்பட்ட மாத்திரத்திலேயே ரஜினிகாந்தையும் மிரட்டினார் இராம. கோபால அய்யர்வாள்.

"இந்த வரலாற்று மோசடிப் படத்தில் ரஜினி நடிக்கக் கூடாது. இந்தப் படம் மூலம் மக்களை மத மாற்றம் செய்யப் பாதிரி யார்கள் திட்டமிட் டுள்ளனர். புனித தோமையார் படத்தில் ரஜினி நடித்தால் மத மாற்றத்துக்கு அவர் துணை போய் விடுவார். இதன் மூலம் ரஜினியை சாக் கடையில் தள்ளிவிடப் பாதிரி யார்கள் முயற்சிக்கி றார்கள்" என்றெல்லாம் இராம.கோ பாலய்யர் கூட்டம் தலையறுக் கப்பட்ட கோழி போல துடி துடிக்கவில்லையா - மிரட்ட வில்லையா?

ரஜினி அரசியலில் நுழைந் தால், அவாள் நோக்கத்துக்கு மாறாக எள் மூக்களவு அவர் நடந்தால் போதும், அவ்வளவு தான் அம்மணமாக ஆட ஆரம்பிப்பார்கள், எச்சரிக்கை!

- மயிலாடன்

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner