எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நெருப்புக்கு முன்னால் மதுரை மீனாட்சி சரண்!

தீ விபத்தால் சிலைகள், தூண்கள் வெடித்துச் சிதறின!

பரிகாரம் என்ற பெயரால் பார்ப்பனர்களுக்கு வருவாய் வேட்டை

மதுரை, பிப்.4 கடவுளச்சிகளில் மீனாட்சிக்குப் பெயர் சக்தியாம் -- அந்த மதுரை மீனாட்சிக் கோயில் தீ விபத்துக்கு ஆளாகி கடைகளும், சிலைகளும், தூண்களும் வெடித்துச் சிதறின. கல்யாணமானாலும், கரு மாதியானாலும் பார்ப்பனர்களின் கல்லாப் பெட்டி நிரம்பும், அது போல கோயில்பற்றி எரிந்தாலும் பரிகாரப் பூஜைகள் என்ற பெயரால் அர்ச்சகப் பார்ப்பனர்களுக்கு வரவுதான்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில் இருந்து சுந்தரேசுவரர் சுவாமி சன்னதி செல்லும் வழியில் வீரவசந்தராயர் மண்டபமும், ஆயிரங்கால் மண்டபமும் உள்ளன. அந்த பகுதியின் இருபுறங்களிலும் 45 கடைகள் இருந்தன. கோவிலில் நேற்று முன்தினம் பூஜை முடிந்து இரவு 10 மணிக்கு நடை சாத்தப் பட்டது.

இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ

சுமார் 10.30 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தின் அருகே உள்ள ஒரு கடையில் இருந்து புகை வருவதை பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கண்டனர். அதனையடுத்து, தீயணைப்பு துறை யினருக்கு தகவல் கொடுத்தனர்.

மேற்கு சித்திரை வீதியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனே அங்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. உடனே அருகில் உள்ள மற்ற தீயணைப்பு நிலையங்களில் இருந்து 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங் களும், மாநகராட்சி தண்ணீர் லாரி களும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆயிரம் கால் மண்டப கூரை, கல்தூண்கள் இடிந்தன

மீனாட்சி அம்மன் கோவிலில் 4 கோபுர வாசல்கள் உள்ளன. இதில் தெற்கு, கிழக்கு கோபுர வாசல் பக்கம்தான் பக் தர்கள் அதிகம் பேர் வரு வார்கள். கிழக்கு கோபுர வாசல் பகுதியில் கடைகள் அதிகம் உள் ளன. கலைப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ள ஆயிரம் கால் மண் டபம் இந்த பகுதியில்தான் உள்ளது.

தீப்பிடித்த கடைகளில் துணி களால் ஆன கலைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்ததால் துணிகளில் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அடுத் தடுத்த கடைகளில் தீ வேகமாக பரவியது. இதனால் சுமார் 30க்கும் மேற்பட்ட கடை களில் இருந்த பொருட்கள் அனைத்தும் கருகி சாம் பலாயின. இதில் மண்ட பத்தின் மேற்கூரையின் ஒருபகுதி இடிந்து விழுந்தது.

தீயணைப்பு வீரர் களுடன், கோவில் ஊழி யர்களும் சேர்ந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 36 கடைகள் எரிந்து சாம்ப லாயின.

அப்பகுதியில் இருந்து நேற்று காலையிலும் புகை வந்து கொண்டே இருந்தது. அதிக வெப்பம் காரணமாக வீரவசந்தராயர் மண்டபத்தின் ஒரு பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்தது. சில கல் தூண்களும் இடிந்தன. மேலும் மண்டபம் முழுவதும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் அங்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

சாம்பலான கடவுளர் சிலைகள்,

ஓலைச்சுவடிகள், கடைகள்

ஆயிரங்கால் மண்டபத்தில் புராதன பொருட்கள், பழங்கால சிற்பங்கள், ஓலைச்சுவடிகள் வைக் கப்பட்டிருந்தன. நேற்று நடந்த தீ விபத்தில் இந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.

விபத்து குறித்து அறிந்ததும் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நிகழ்விடத்துக்கு விரைந்தார். காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவ லர்கள், கோயில் ஊழியர்கள் உட னிருந்தனர்.

நிபுணர் குழு

தீ விபத்து நடந்த பகுதியை பார் வை யிட்ட பின்னர் மாவட்ட ஆட்சி யர் வீரராகவராவ் கூறியதாவது:

“தீ விபத்தில் உயிர் இழப்பு ஏற் படவில்லை. வீரவ சந்தராயர் மண்டபத்தின் ஒரு பகுதி யில் மேற் கூரையும், மேற்பரப்பில் குறுக்காக இருந்த சில கல் உத்தி ரங்களும் இடிந்து விழுந்துள்ளன. 4 சிறப்பு பொறியாளர்களை கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு மண்டப பகு தியில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஆய்வு செய்யப்படும். ஆயிரங்கால் மண்டபத்துக்கு எவ் வித பாதிப்பும் இல்லை. விபத்து குறித்து காவல் துறையினர் விசா ரணை நடத்தி வருகிறார்கள்’’ என்றார்.

கருகிய ஆயிரங்கால் மண்டபம்

சேதம் அடைந்த வீரவசந்தராயர் மண்டபம் சுமார் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. இந்த மண்டபம் திருமலை நாயக்கரின் சகோதரர் முத்துவீரப்ப நாயக்கரால் 17ஆ-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பரிகார பூஜையாம்

விபத்து காரணமாக நேற்று காலை கோவிலில் சிறப்பு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. இது குறித்து கோவில் பட்டர் செந்தில் கூறுகையில், தீ விபத்து காரணமாக ஆட்சிக்கோ, கோவிலுக்கோ எவ்வித ஆபத்தும் இல்லை. எனவே யாரும் பீதி அடைய வேண்டாம் என்று சமாதானம் கூறி சமாளித்தார்.

காரணம் என்ன?

ஆயிரங்கால் மண்டபம் பகுதி அருகே உள்ள ஒரு கடைக்குப் பின் னால் மின்சார பெட்டி உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு கடையை அடைத்து விட்டு சென்ற போது,  அந்த மின்சார பெட்டியில் இருந்து தீ கசிவு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் தான் தீ விபத்து ஏற்பட்ட தாகவும் ஒருவர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை தோறும் கடைக்காரர்கள் திருஷ்டிக்காக கடை முன்பு கற்பூரம் ஏற்றுவது வழக்கம். அதனை அணைக்காமல் சென்று அதில் இருந்து தீப்பொறி பறந்து கடையில் பற்றி இருக்கலாம் என் றும் கூறப்படுகிறது. கடையில் மின் விளக்கை அணைக்காமல் சென் றிருந்தால் கூட விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என காவல் துறையினர் கூறினர்.

புறாக்களும் தப்பவில்லை

திடீர் தீயினால் புறாக்கள் மீதும் தீப்பிடித்து அந்த புறாக்கள் உயிரை காப்பாற்றி கொள்ள அருகில் இருந்த கடைகளுக்கு பறந்து சென்ற போது தீ பரவி இருக்கும் என்றும் ஒரு சிலர் தெரிவித்தனர்.

மீனாட்சியின் கோபமேதான் தீ விபத்துக்குக் காரணம் என்று கதை கட்டி விடுகிறார்கள்.

கிரக பலனாம்

தீ விபத்துக்கான காரணம் கிரக பலன் என்று ஓர் ஏடு ஜாதகத்தை கட்டம் கட்டி வெளியிடுகிறது; கிரக பலனிலிருந்து கடவுள் மீனாட்சிகூட தப்பிக்க முடியாதா?

ஜோதிடமா? கடவுளா?

நல்ல பட்டிமன்ற தலைப்புதான்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner