எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘துக்ளக்‘ ஏட்டிற்கு ‘சோ’விற்குப் பிறகு, அதன் ஆசிரியராகப் ‘பட்டாபிஷேகம்‘ செய்துகொண்ட ஆடிட்டர் குருமூர்த்தி அய்யர், ஏதோ திராவிட அரசியலையே அடியோடு துடைத்தெறிய புதிய 11 ஆவது ‘அவதாரம்‘ எடுத்தவர்போல, பல குதிரைகள்மீது பந்தயம் கட்டி தோற்றுப்போன நிலையில் புதிய ‘‘ஆன்மிக அரசியல்’’ எனும் புருடா விடும் மாயக் குதிரையைத் தட்டிக் கொடுத்துக் கொண்டுள்ளார்; இப்பொழுது அவர் நிலை என்ன தெரியுமா? அவரது ‘துக்ளக்‘ ஆசிரியர் பதவியே ஆட்டம் கண்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளதாம்!

‘துக்ளக்‘ ஏட்டின் உரிமையாளர்களான ‘சோ’வின் குடும்பத்தினர், குருமூர்த்தி அய்யரை வெளியேற்றிட உள்ளே சில மாதங்களாக நடந்து வந்த ‘பனிப்போர்’ இப்போது ‘பூதாகரமாக’ வெடித்து வெளியே வந்து, அந்த அலுவலகத்தையே உலுக்கு உலுக்கென உலுக்கிக் கொண்டுள்ளது!

இதற்கிடையில், ‘குமுதம்‘ அய்யங்கார் ஒருவரும் குழம்பிய குட்டையில் மீனைப் பிடிக்க இதுதான். சரியான சந்தர்ப்பம் என்று மிகுந்த பேராசையுடன் தூண்டிலைத் தூக்கி அலைகிறாராம் - இப்படியெல்லாம் ‘துக்ளக்‘ ஆபீஸ் பையன் வெளியே வந்து குப்பைக் கொட்டும்போது முணுமுணுக்கின்றானாம்.

இது உண்மையா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner