எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘பிராமிஸ் டூத்பேஸ்ட்டை நம்புகிறீர்களா?’

மோடியின் வாக்குறுதிப் பற்றி பிரகாஷ்ராஜ்

சென்னை, பிப்.7 கருநாடகத்தில்  சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பெங்களூரில்  பாஜ  பரிவர்த்தனா கூட்டத்தின் நிறைவு விழா, பேரணி நடைபெற்றது. இதில் பேசிய  பிரதமர் மோடி, ‘பாஜ ஆட்சிக்கு வந்தால் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு  போன்றவற்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும்’ என்றார். இது குறித்து டிவிட்டரில் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது:

‘பிராமிஸ்  டூத் பேஸ்ட்’ கடந்த 2014 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. (பிராமிஸ்என்பதற்கு வாக்குறுதி என்று பொருள்). ஆனால், பற்பசை எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதனால், விவசாயிகள், இளைஞர்களிடம் புன்னகையை  வரவழைப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. இப்போதும் பிராமிஸ்டூத்பேஸ்டை  நம்புகிறீர்களா? கருநாடகாவில் நேற்றுமுன்தினம்நடந்த பேரணியில் பிராமிஸ்  டூத் பேஸ்ட்விற்கப்பட்டது. அதை நம்புகிறீர்களா? அல்லது அதை  வாங்கப்போகிறீர்களா?  இவ்வாறு அவர் கேட்டுள்ளார்.

கடந்தநாடாளுமன்றதேர் தலின்போதுபாஜபல்வேறு  வாக்குறுதிகளை விவசாயி களுக்கும் இளைஞர்களுக்கும் வழங்கியது.அதைத்தான்  பிராமிஸ் டூத்பேட்ஸ் என கிண்டலாக விமர்சித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.

 ஊன்றிப் படியுங்கள்!

இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் இந்துக் கோவில்களை தங்கள் வசம் கொண்டு வந்து கொள்ளையடிக்கவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பார்ப்பனர்களும், சங்பரிவார்களும் முண்டாசு கட்டிக் கொண்டு முயற்சித்து வருகின்றனர்.

முதலில் தங்கள் வாலை நீட்டி நோட்டமிடுகின்றனர். இந்து அறநிலையத் துறை ஏன் ஏற்படுத்தப்பட்டது? அதன் பின்னணி என்ன? அதன் அவசியம் என்ன? என்பது குறித்து நாளைமுதல் ‘விடுதலை’ 3 ஆம் பக்கத்தில் வரலாற்று ஆவணமாக பல்வேறு தகவல்கள் வெளிவர உள்ளன. ஊன்றிப் படியுங்கள்!

(ஆ-ர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner