எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.8 தலைமைச் செயலகத்துக்கு எதிரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயிலை 15 நாட்களில் இடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைமைச் செயலகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு எதிரே வருவாய் துறைக்குச் சொந்தமான அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோட்டை பாளையத்தம்மன் கோயிலை காலி செய்து அந்த இடத்தை ஒப்படைக்குமாறு கூறி கோயில் பூசா ரிக்கு புரசை வாக்கம் வட்டாட்சியர் தாக்கீது அனுப்பியிருந்தார்.

இந்த தாக்கீதை ரத்து செய் யக்கோரி கோயில் பூசாரியான குரு சாமி என்ற அப்பு, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு வில், “500 பக்தர்கள் சேர்ந்து கட்டிய அந்த கோயிலை கடந்த 50 ஆண்டு களாக பராமரித்து வருகிறேன். கோயி லுக்கு தினமும் பூஜைகள் உள்ளிட்ட அன்றாட பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே அந்த கோயிலை அகற்ற பிறப்பிக்கப் பட்ட தாக்கீதை ரத்து செய்ய வேண் டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதி பதிகள் எம்.வேணுகோபால், எஸ். வைத்யநாதன் ஆகியோர், “இந்த கோயில் வருவாய்த் துறைக்கு சொந்த மான அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப் பட்டுள்ளது. அந்தக் கோயிலுக்குள் ஓம் சர்வ சக்தி சாய் ஆலயம் என்ற மற்றொரு ஆலயமும் உள்ளது. எந்தக் கடவுளும் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனக்கு கோயில் கட்ட வேண்டுமென்று கேட்பதில்லை. உண்மையான பக்தி உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு நிலத்தில் கோயில் கட்ட மாட்டார்கள். ஏனென் றால் அந்த கோயில் என்றாவது ஒரு நாள் இடிக்கப்படும் என்பது அவர் களுக்கு தெரியும். சாலை யோரத்தை ஆக்கிரமித்து அமைக்கப்படும் பெரும் பாலான கோயில்கள் அந்த கோயில் நிர்வாகிகளின் சுயநலனுக்காகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே இந்த கோயிலை அதிகாரிகள் 15 நாட்களுக்குள் இடித்து அப்புறப் படுத்த வேண்டும்’’ என்று உத்தர விட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner