எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பாலசோர், பிப்.8 அணு குண்டுகளை சுமந்துச் சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை யுடைய பிருத்வி-2 ஏவுகணையை இந்தியா புதன்கிழமை வெற்றி கரமாக சோதித்தது.

ஒடிசா மாநிலம், பாலசோர் அருகே உள்ள சண்டிப்பூரில் பிருத்வி-2 ஏவுகணை புதன்கிழமை இந்திய ராணுவத்தால் சோதிக் கப்பட்டது. அங்குள்ள 3ஆவது ஏவுதளத்தில் இருந்து காலை 11.35 மணியளவில் பிருத்வி-2 ஏவுகணை இலக்கை குறிவைத்து ஏவப்பட்டது.

இதையடுத்து, பாய்ந்து சென்ற அந்த ஏவுகணை திட்ட மிட்டபடி, வங்காள விரிகுடா கடலில் நிறுத்தப்பட்டிருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த ஏவுகணை சோதனையை ராணுவ உயரதி காரிகளும், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஒ) விஞ்ஞானிகளும் நேரில் பார்வையிட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner