எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்பதியில் நாத்திக செயல்

திருப்பதி, பிப்.8 திருப்பதியில் குழந்தை கடத்தல், வழிப்பறி செயின் பறிப்பு சம்பவங்களும் அதிகரித்து வரு கின்றன. அதைத் தடுக்கவும், பக்தர்களுக்கு மேலும் பாது காப்பை அதிகரிக்கவும் திருமலை மற்றும் திருப்பதி முழு வதும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்த தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் படி திருமலை நடைபாதை மார்க்கங்கள், மாடவீதிகள், முக்கிய சந்திப்புகள் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் 1400 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணிகள் நடை பெற்று வருகின்றன.

ஏழுமலையான் சக்திமீது நம்பிக்கை இல்லாமல்தானே இவ்வளவு ஏற்பாடுகளும்? அசல் நாத்திக செயலே!ரயில் நிலையங்களில்

இந்தித்திணிப்பு

தாம்பரம், பிப்.8 தாம்பரம் இரயில் நிலையத்தில் உள்ள 3ஆவது நடைமேடையில் சுமை தூக்கும் தொழிலாளி இங்கே இருக்கிறார் என்ற அறிவிப்பின் இந்தி வார்த்தையை ஆங்கில மொழியில் எழுதி வைத்துள்ளது தென்னக இரயில்வே நிர்வாகம்.

மேலும் தாம்பரம் ரயில் நிலைய படிக்கட்டுகளில் விழிப்புணர்வு வாசகங்கள் திடீரென்று அமைக்கப்பட்டுள்ளன. அதில் இந்தி, தமிழ், ஆங்கிலம் மூன்று மொழிகளில் விழிப் புணர்வு வாசகங்கள் உள்ளன. எதன்பேரிலாவது இந்தியை நுழைக்கவேண்டும் என்கிற துடிப்பை மட்டுமே ரயில்வே துறை நிர்வாகத்தினரின் செயல் கள் உணர்த்துகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner