எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜனநாயகம் - மதச்சார்பின்மை - பொருளாதார வளர்ச்சி - சகிப்புத்தன்மை காப்பாற்றப்பட

பி.ஜே.பி. அணியைத் தோற்கடிப்போம் - வாரீர்!

எதிர்க்கட்சிகளுக்கு சோனியா  அழைப்பு

புதுடில்லி, பிப். 9 ஜனநாயகப் பண்பு, மதச்சார்பின்மை,பொருளாதார வளர்ச்சி, சகிப்புத் தன்மை இவற்றை நிலைநிறுத்திட பி.ஜே.பி.யையும், அதன் அணியையும் தோற்கடிக்க ஒன்று சேர்வோம் வாரீர் என்று எதிர்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மேனாள் காங்கிரசு தலைவர் சோனியா காந்தி.

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியின் பதவிக்காலம் வரும் 2019-ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது.மத்தியஅரசின் நிதி நிலை அறிக்கையில் மக்களுக்கு நலன் பயக்கும் விதத்தில் எவ்வித திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. தேர்தலின்போது பாஜகஅளித்தவாக்குறுதிகள்நிறை வேற்றப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் மோடியின் உரை தேர்தல் பரப்புரை போன்றே இருந்தது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார். வேலைவாய்ப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி பக்கோடா விற்பது குறித்து பேசிய கருத்து இளைஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டில்லியில் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலை வர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

தேசிய அளவிலான முக்கியப் பிரச் சினைகளில் நாடாளுமன்றத்துக்கு உள் ளேயும், வெளியேயும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று அய்க்கிய முற்போக்குக் கூட்ட ணியின் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

சோனியா காந்தி பேசும்போது,

“வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரசு தலைவருடனும், ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சித் தலை வர்களுடனும்பணியாற்றுவேன். மோடிக்கு எதிரான மனநிலையிலுள்ள கட்சிகள்ஒன்றுதிரண்டுதேர்தலை சந்திக்கவேண்டும். இது போல்நாம் ஒன்றிணைவதால் பாஜக தோற்கடிக் கப்பட்டு காங்கிரசு ஆட்சி ஏற்படுமே யானால் ஜனநாயக, மதச்சார் பற்ற, சகிப்புத்தன்மை, பொருளாதார வளர்ச்சி ஆகியவையுள்ள இந்தியாவாக நம் நாடுமீட்டெடுக்கப்படும்.எனவேஅணி திரளுவோம். தேசிய ஜனநாயக கூட்ட ணியைத்தோற்கடிப்போம்''என்றார்.

நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 17 எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலை வர்கள் அகமது படேல், குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, தேசிய வாத காங்கிரசு கட்சியின் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் மிசா பாரதி, ஜெயப்பிரகாஷ் நாராயண் யாதவ், திரிணாமூல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த டெரீக் ஓ’ பிரையன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த ராம்கோபால் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குலாம் நபி ஆசாத்

கூட்டத்துக்குப் பிறகு குலாம் நபி ஆசாத், செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

மாநில அளவில் எதிர்க்கட்சிகளி டையேகருத்துவேறுபாடுஇருக்க லாம். ஆனால், தேசிய அளவிலான முக்கியத்துவம் நிறைந்த பிரச்சினை களில், ஆளும் பாஜகவை எதிர்கொள் வதற்கு எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று கூட்டத்தில் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

ஜாதி, மத ரீதியில் வன்முறை விதைக் கப்பட்டு வருவதால், எதிர்க் கட்சிகள் எச்சரிக்கை உணர்வுடன் இருந்து ஒற் றுமை காக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பட்ஜெட் கூட்டத் தொடரில்,  ஆளும் பாஜகவை எதிர்கொள்வதற்கு திட்டம் ஒன்றை வகுப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தரவேண்டும் என்று சோனியா காந்தி கேட்டுக் கொண்டார்  என்று குலாம் நபி ஆசாத் கூறினார்.

இந்தக் கூட்டத்தில், முத்தலாக் தடை மசோதா, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விவகாரம்,உத்தரப்பிரதேசத்தில்கடந்த சில நாள்களுக்குமுன் நிகழ்ந்த மதக் கலவரம் போன்ற விஷயங்கள் விவாதிக் கப்பட்டதாகத் தெரிகிறது. காங்கிரசு கட்சியின் தலைவராக ராகுல் காந்தி கடந்த ஆண்டு பொறுப்பேற்ற பிறகு, சோனியா காந்தி காந்தி தலைமையில் நடைபெற்ற முதல் கூட்டம் இதுவாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner