எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

போடி நாயக்கனூரில் பெரி யாரியல் பயிற்சிப் பட்டறை நடந்து கொண்டு இருந்தது. ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி (ஞிஷிறி) ஒருவரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர் களிடம் அப்பொழுது ஒரு தக வலைச் சொன்னார்.

“40 ஆண்டுகளுக்கு முன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிலை திருட்டு ஒன்று நடந்தது. அப்பொழுது தமிழ்நாடு முழுவதும் பிரபல மாகப் பேசப்பட்ட ஒன்று இது.

வெள்ளைக்கார அதிகாரி கள் என்னை விசாரிக்குமாறு முதலில் பணித்தார்கள். ஆனால், பார்ப்பன அதிகாரிகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டார்கள். ‘இவர் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் கோயிலுக்குள் அவர் பிரவேசிக்கக் கூடாது’ என்று கூறி விட்டனர்.

அந்தத் திருட்டைக் கண்டு பிடிக்கப் பார்ப்பன ஆய்வாளர் ஒருவரை நியமனம் செய்தனர். பல நாள் விசாரணை நடத்தியும் அந்தக் காவல்துறைப் பார்ப்பன ஆய்வாளரால் திருட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வேறு வழியின்றி என்னிடமே மீண்டும் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தனர்.

கோயில் அர்ச்சகப் பார்ப் பானுக்குத் தெரியாமல் அந்தத் திருட்டு நடந்திருக்க முடியாது என்பது எனது உறுதியான முடிவு.

கோயில்அர்ச்சகப்பார்ப் பனரைக் கைது செய்து விசாரிக்கவேண்டியமுறை யில் விசாரித்தேன். அவ்வளவு தான், அய்யர் உண்மையைக் கக்கி விட்டார். ஒரு பார்ப் பன ஆய்வாளரால் கண்டு பிடிக்கப்பட முடியாதது என் னால் மட்டும் எப்படி முடிந்தது?

காரணம் எளிதானதே; அர்ச்சகர்,காவல்துறைஆய் வாளர் இருவருமே பார்ப்பனர் கள் என்பதால் அந்த இனப் பாசம்தான் உண்மையைக் கண்டுபிடிக்கத் தடையாக இருந்தது” என்று சொன்னார் அந்தஓய்வுபெற்றகாவல் துறைத் துணைக் கண்காணிப் பாளர். அவர் பெயர் கணபதி நாடார்.

இந்தத் தகவல் ‘விடுதலை’ ஏட்டிலும் (16.4.1985) வெளி வந்துள்ளது.

ஜாதி என்பது எந்தெந்த வகைகளில் எல்லாம் புகுந்து விளையாடுகிறது என்பது கவனிக்கத்தக்கதாகும். இன் னொரு கருத்து - இதில் அடங்கியிருக்கிறது. கோயில் அர்ச்சகர்பார்ப்பான்என்றால் சாமிசிலையைத் திருடமாட் டான் என்று எண்ணுவதெல்லாம் படுமுட்டாள்தனமும், அறியா மையும் ஆகும்.

இன்னும் சொல்லப் போனால் நம்மைவிட அர்ச் சகப் பார்ப்பானுக்குத்தான் துல்லியமாகவும் தெரியும் - அது ஒன்றும் கடவுளும் இல்லை,கத்தரிக்காயும்இல்லை, வெறும் கல்லு உலோகத்தாலா னது என்பது அவனுக்குத்தானே நன்றாகத் தெரியும், நாள் தோறும் அதைக் கழுவிக் குளிப்பாட்டுவது எல்லாம் அவன்தானே!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner