எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வருகின்ற வரையில்

எங்கள் போராட்டம் - அறப்போராட்டமாகத் தொடர்ந்து நடைபெறும்

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

சென்னை, பிப்.11  நீட் தேர்விலிருந்து தமிழகத் திற்கு விலக்கு வருகின்ற வரையில் எங்கள் போராட்டம் - அறப்போராட்டமாகத் தொடர்ந்து நடைபெறும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தி யாளர்களிடம் கூறினார்.

நீட் தேர்விலிருந்து நிரந்தரமாக தமிழ்நாட் டிற்கு விலக்குக்கோரி சென்னை பெரியார் திடலில் நேற்று (10.2.2018) ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில்  அனைத்துக் கட்சிகள் - அமைப்புகளின் மாணவர்கள் சந்திப்புக் கலந்துரையாடலுக்குத்  தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

அரசியல் சட்டப்படி நமக்குள்ள உரிமை

நீட் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்களிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள் ஓராண்டாகியும் இன்னமும் கிடப்பிலேயே கிடக்கிறது. அந்த மசோதாக்கள் அரசியல் சட்டப்படி நமக்குள்ள உரிமையை வலியுறுத்துகின்ற போக்காகும்.

எனவே, அந்த மசோதாக்களை வலியுறுத்தி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறவேண் டும். அல்லது அந்த மசோதாக்களை மத்திய அரசு ஏன் ஏற்கவில்லை என்கிற காரணம் கூறி, அந்த மசோதாக்களைத் திருப்பி அனுப்பினால், நீதிமன்றங்கள்மூலமாகவோ, மற்றவை மூல மாகவோ நாம் வழக்கைத் தொடர முடியும் என்கிற சூழ்நிலையில், இப்பிரச்சினையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடி யும் என்பதற்காக அனைத்து மாணவர் அமைப்புகளைச் சார்ந்தவர்களும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்று இருக்கிறார்கள்.

கலந்துரையாடலில் பங்கேற்றோர்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, தி.மு.க. மாணவரணி சிவிஎம்பி.எழிலரசன் எம்.எல்.ஏ., துணை செயலாளர் வீ.கவிகணேசன்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி முற்போக்கு மாணவர் கழக மாநில துணை செயலாளர் வழக் குரைஞர் பெ.செஞ்சுடர்,

தேசிய மாணவர் காங்கிரசு மாநிலத் தலை வர் அய்.ஏ.நவீன், தமிழ்நாடு இளைஞர் காங் கிரசு ஜே.எம்.எச்.அசன் ஆரூண்,

மதிமுக மாணவரணி செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், மதிமுக மாணவரணி மாநில துணை செயலாளர்கள் துரை.மணிவண்ணன், இரா.சத்தியகுமாரன்,

அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் சீ.தினேஷ்

மக்கள் அதிகாரம் ஜெயகாமராஜ்,

முசுலீம் மாணவர் கூட்டமைப்பு எம்.அன் சாரி,  முசுலீம் மாணவர் கூட்டமைப்பு தேசிய செயலாளர் மு.அல்அமீர்,

சமூக நீதி இயக்கம் மாநில செயலாளர்

எஸ். நூருதீன்,

ஏ.அய்.எஸ்.எஃப்  பி.ராஜி, ஆர்.ராமசாமி,

திராவிட இயக்க தமிழர் பேரவை  ஆ.சிங்க ராயர்,   மு.மாறன், மாணவரணி சிறீநாத், பா.கார்த் திகேயன், வேலூர் மாவட்ட செயலாளர் வே.ஜெகன்னாதன்,

மறுமலர்ச்சி மாணவர் மன்றம் இர.லோகேஷ், அபிலேஷ்,

இந்திய சமூகநீதிப்பேரவை பி.ஸ்டீபன் ஜெப மாரீஸ், இந்திய சமூக நீதி இயக்கம் ஆர்.ராஜன், டி.மோகன்,

கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.முகமது நவீத்,

அச்சமில்லை அமைப்பின் பொறுப்பாளர்கள் எச் பிரேம்குமார், என்.ஜி.சேகர், கே.சிறீநாத், ஆர்.அரிகரன், எம்.அஜீத்குமார்  மற்றும் மாண வர் பிரதிநிதிகள் அமரேசன், டி.சாம், அப்துல் ஹமீத்,

அகில இந்திய கிராமப்புற மாணவர்கள் சங்கம் தமிழ் கா.அமுதரசன், மாநில செய்தி தொடர்பாளர், சென்னை மாவட்டச் செயலாளர் முத்தையா குமரன்

மற்றும் பிற அமைப்புகள், தேசிய மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களாகிய பெரும் பாலான மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சியைச் சார்ந்த மாணவர் அமைப்புகள், பேராளர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் கூட்டத்தில், தெளிவாக எடுக்கப்பட்ட முடிவு,

வாயிற்கூட்டங்களில் நாங்களும் பங்கேற்போம்

நீட் தேர்வுக்குரிய விலக்கை, மத்திய அரசை வலியுறுத்தி உடனடியாகப் பெறவேண்டும். அதற்கு அழுத்தம் கொடுக்கின்ற வகையில், மக்களுக்கு  இது ஏதோ முடிந்து போய்விட்டது என்ற ஒரு போலி தோற்றத்தை உருவாக்கி, அதனை உடைப்பதற்காகவும், வெகு தெளி வாக, எல்லா மருத்துவக் கல்லூரிகள், மற்ற கல்லூரிகளுக்கு முன்பாக, வாயிற்கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தவிருக்கிறோம். அந்த வாயிற்கூட்டங்களுக்கு நாங்களும், மாணவர் அமைப்புகளோடு சென்று, இந்த நீட் தேர்வி னால் என்னென்ன கேடுகள், அது ஆக்டோபஸ் போன்று எட்டுக் கால் பூச்சி போன்று விரிந்துகொண்டிருக்கிறது - அதனை எப்படி தடுப்பது என்பதை அந்த வாயிற்கூட்டங்களில் எடுத்துச் சொல்வது.

அதற்கடுத்தபடியாக, தொடர் பரப்புரை களை, கருத்தரங்குகளின் மூலமாக ஆங்காங்கு மாவட்டத் தலைநகரங்களில் சிறப்பாக செய்வது.

தலைநகர் டில்லியில்...

அதற்கடுத்து, இந்தியத் தலைநகர் டில் லியில், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவடைவதற்குள், நீட் தேர்வை எதிர்த்து ஒரு பெரிய போராட்டத்தினை மாணவர் அமைப் புகளின் சார்பில் நடத்துவது. அன்றைக்கே அனைத்து இந்திய அளவில், நீட் தேர்வினால் ஏற்படுகிற கேடு - எல்லா மாநிலங்களின் உரிமைகளை எப்படி பறிக்கிறது என்பதை விளக்கக்கூடிய அளவிற்கு ஒரு மாபெரும் தேசிய கருத்தரங்கத்தை டில்லி தலைநகரில் நடத்துவது.

அதேபோல, கடிதம், மின்னஞ்சல் மூலமாக வும், பொது மக்களின் கையெழுத்தைப் பெற்று மத்திய அரசை வலியுறுத்தவிருக்கிறோம்.

தேவைப்பட்டால், மீண்டும் ஆலோசனை செய்து, மீண்டும் ஒருமுறை வலியுறுத்தக் கூடிய அளவிற்கு, மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் தமிழக முதலமைச்சரை சந்தித்து வலியுறுத்துவார்கள்.

அதோடு எங்களைப் போன்றவர்கள், சுப.வீ. போன்றவர்கள் முதலில் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இருந்து ஆரம்பிப்போம். மருத்துவக் கல்லூரி வாயிற்கூட்டங்களை நடத்தவிருக்கிறோம். இது ஒரு முதல் தொடக்கம்.

சமூகநீதி பாதுகாப்புப் பேரவை

இந்த அணிக்கு சமூகநீதிப் பாதுகாப்பிற்கான பேரவை (அனைத்துக் கட்சிகள் சமூக அமைப் புகளின் கூட்டமைப்பு) எனப் பெயரிடப்பட்டு இருக்கிறது. இன்றைக்குக் கலந்துகொண்ட மாணவ அமைப்பினரும், ஒத்தக் கருத்துள்ள அத்துணை பேரும் இதில் இணைவார்கள்.

சமூகநீதிக்கு இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற அறைகூவலை நாம் சந்தித்து, அதைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, பொதுத் தன்மையாக இருக்கிறது என்பதை இந்தக் கூட்டம் உறுதி செய்திருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் எட்டு தீர்மானங்கள் தெளிவாக நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.

தமிழக அரசு தெளிவுபடுத்தவேண்டும்

செய்தியாளர்: தமிழக அரசு நீட் தேர்வுக்கு ஆதரவாக இருக்கும்பொழுது, இதை நீங்கள் எப்படி கொண்டு போவீர்கள்?

தமிழர் தலைவர் ஆசிரியர்: நீங்கள் சொல்வது உண்மை. அதேநேரத்தில், தமிழக கல்வித் துறை அமைச்சர் என்ன சொல்கிறார் என்றால், நீட் தேர்வை எதிர்ப்பதுதான் எங்களுடைய கொள்கை என்கிறார். அதைத் தெளிவாக்கவேண்டும் என்பதற்காகத்தான் தமிழக முதலமைச்சரை சந்திக்கவிருக்கிறார்கள்.

நீட் தேர்வில் பல குளறுபடிகள்

செய்தியாளர்: இந்த முயற்சியை ஓராண்டிற்கு முன் செய்திருந்தால்,  இதற்கான விடை கிடைத் திருக்குமல்லவா?

தமிழர் தலைவர் ஆசிரியர்: ஓராண்டிற்கு முன்பே நாங்கள் பொதுமக்கள் மத்தியில் செய்திருக்கிறோம். இருந்தாலும், தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, தவறான நம்பிக்கையை பெற்றோர்களுக்கும், மாண வர்களுக்கும்  அளித்தது.

அந்த வழக்கில், உயர்நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.

அந்தந்த மாநில மொழிகளில் கேள்வித்தாள் களை மொழி பெயர்ப்போம் என்று சொல்லிவிட்டு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கேள் வித்தாள் என்று பல குளறுபடிகள் நடை பெற்றன. இதனை நீதிமன்றங்களும் பதிவு செய் திருக்கின்றன.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியும் பதிவு செய்திருக்கிறார்; உச்சநீதிமன்ற நீதிபதியும் பதிவு செய்திருக்கிறார்.

இந்தப் பிரச்சினைகளையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சென்று மக்களைச் சந்திப்பது - வாயிற் கூட்டங்களை நடத்துவது - பொதுஜன கருத்தை இன்னும் தீவிரமாக உருவாக்குவது - இது வீதிமன்ற நடவடிக்கை.

இதற்கு நேர் இணையாக நீதிமன்றங்களில் மீண்டும் வழக்கை நடத்துவதற்கு வாய்ப்புகள் ஏராளம் இருக்கின்றன. எனவே, அந்த நீதிமன் றத்தையும் நாங்கள் நாடுவோம். மாணவர்கள் சார்பில், பெற்றோர் சார்பில், கட்சிகள் சார்பில், அமைப்புகள் சார்பில்.

எங்கள் போராட்டம் என்பது - அறப்போராட்டமாகத் தொடர்ந்துகொண்டே இருக்கும்

ஓய்வு பெற்ற நீதிபதிகள், சட்ட அறிஞர்கள் எங்களுக்கு மிகப்பெரிய துணையாக இருக்கி றார்கள். ஆகவே, விரைவில் அந்தப் பணியைத் தொடங்குவோம்.

இந்த நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வருகின்ற வரையில் - அடுத்தது அகில இந்திய அளவில். அதுவரையில், எங்கள் போராட்டம் என்பது - அறப்போராட்டமாகத் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

- இவ்வாறு செய்தியாளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner