எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

** நியூசிலாந்து நாட்டில் நான்கு நாள்கள் வேலை - மூன்று நாள்கள் ஓய்வு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

(வேலையில்லாத வேலையோ!)

** ரஜினியின் நிறம் காவியாக இருந்தால், அவருடன் கூட்டணி வைக்கமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார் நடிகர் கமலகாசன்.

(இனிமேல் புதிதாகத் தெரிந்துகொள்ள என்ன இருக்கு?)

** மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே நிரந்தர தீயணைப்பு நிலையம் நிறுவப்பட உள்ளது.

(மீனாட்சி சக்தியின்மீது நம்பிக்கை இல்லையோ!).

** மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்துக் குறித்து தனியார் வல்லுநர் குழு ஆய்வு.

(மீனாட்சி கனவில் வந்து அர்ச்சகரிடம் ஏதும் சொல்லவில்லையா?).

** நாடாளுமன்றத்தில் காங்கிரசு உறுப்பினர் ரேணுகாதேவி சிரித்துவிட்டாராம் - சிரிப்புக்குக்கூட ஜி.எஸ்.டி. வரி மோடி ஆட்சியில் விதிக்கப்பட்டுள்ளதா என்று எதிர்க் கேள்வியை கேட்டுள்ளார் ரேணுகா சவுத்ரி.

(மோடி சாகேப் முகத்தில் இப்பொழு தெல்லாம் தான் சிரிப்பைக் காண முடியவில்லையே!)

** அபுதாபியில் இந்துக் கோவிலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

(முஸ்லிம் நாடாக இருந்தாலும் யாரும் - அந்தக் கோவிலை இடிக்கமாட்டார்கள் - உபயம்: பாபர் மசூதி இடிப்பு).

** இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் ராஜபக்சே கூட்டணி அமோக வெற்றி!

(பெருமாள் போய் பெத்த பெருமாள் வந்த கதைதான்).

** பண மதிப்பு நீக்கத்தின்போது திரும்பப் பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள்

எண்ணும் பணி இன்னும் முடியவில்லை.

(ஆனாலும், இதைக் கொண்டு வந்த மோடி ஆட்சியின் நாள்கள்  எண்ணப்படுகின்றன!).

** கிருஷ்ணகிரியில் நகைக்கடையை ஒரு நடிகை திறக்கப்போன போது பெருங்கூட்டம் - காவல்துறை தடியடி!

(நகைக்கும், நடிகைக்கும் ஓர் எழுத்துதான் வித்தியாசம்).

** தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைத் தவறாக பாடினாராம் மேனாள் அமைச்சர்!

(சரியாகப் பாடவேண்டுமானால், காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரசுவதியை அணுகவும்).

** மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்க வாஸ்து தோஷம் கழித்தது காங்கிரசு.

(‘தோஷம்' காங்கிரசுகாரர்களின் புத்தியில்தான் இருக்கிறது!).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner