எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, பிப் 13 பக்கோடா விற்பனை செய்வதும் ஒரு வேலைவாய்ப்புதான் என்று மோடி கூறியதன் மூலம், ஒரு தந்தையின் வலியை அவர் புரிந்துகொள்ளவில்லை என்று முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர் கூறினார்.

மாநிலங்களவையில் நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதத்தில் சமாஜ்வாடி கட்சி மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் பிரதமர் சந்திரசேக ரின் மகனுமான நீரஜ் சேகர் பேசுகையில்,பக்கோடாவிற் பனை செய்வதும் ஒரு வேலை வாய்ப்புதான் என்று மோடி கூறியதை நான் ஏற்றுக் கொள் கிறேன். எந்த வேலையும் தாழ்ந்தது கிடையாது என்று காந்தியார் கூறியுள்ளார்.

ஆனால், தொழிலாளர் கண் ணியம் என்பது முக்கியம். தனது மகனை மிகுந்த சிரமத்திற்கு இடையில் படிக்க வைக்கும் ஒரு தந்தையின் வலியை மோடி புரிந்து கொள்ளவில்லை.

எந்த தந்தையும் தனது மகன் பக்கோடா விற்பனை செய்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார். பக்கோடா விற் பனை செய்பவரின் மகன் பக்கோடா விற்பனையாளராக மாறவேண்டும் என்ற ரீதியில் பிரதமர் பேசியுள்ளார் என்றார்.

வேலை வாய்ப்பு குறித்து தனியார் தொலைக்கட்சி ஒன் றிற்கு பேட்டியளித்த மோடி, அரசை நம்பி ஏன் இருக்கிறீர்கள், பக்கோடாவிற்பவர்கள்ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரு மானம் பார்க்கிறார்கள். நமது இளைஞர்களும் பக்கோடா விற்றால் வருவாய் ஈட்டலாமே என்று மோடி கூறினார். மோடி யின் இந்த பேச்சிற்கு நாடு முழுவதும் கடுமையான கண் டனங்கள் எழும்பி வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner