எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

12.2.2018 ‘தினமலரில்' ‘‘இது உங்கள் இடம்'' என்ற பகுதியில் வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் வருமாறு:

இவர் வில்லன் இல்லை!

க.அருச்சுனன், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:

‘இவரா ஹீரோ' என்ற தலைப்பில், ஈ.வெ.ரா., குறித்து, வாசகர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். அவர் எழுதியதை, தவறு என, சொல்ல முன் வரவில்லை. அவர் செய்த நல்லவற்றையும், குறிப்பிட்டு இருக்கலாம்.

‘கனியிருக்க காய் கவர்ந்தற்று' என்ற வள் ளுவர் குறளுக்கு, எதிர்மறையாக உள்ளது, வாசக ரின் கருத்து!

ஈ.வெ.ரா.,வை பற்றி, எனக்கு தெரிந்த சில வற்றை, வாசகருக்கு குறிப்பிட விரும்புகிறேன்...

‘வைக்கம் வீரர்' என, போற்றப்படுபவர்; அது எப்படி வந்தது என்பதை பற்றி, ஈ.வெ.ரா., வரலாறு படித்தால் அறியலாம்/

தென்காசி குமரன் கோவிலில், டி.கே. சி., 60 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று, கோவில் பிரசாதத்தையும் சாப்பிட்டு, புகைப்படம் எடுத்துக் கொண்டவர், ஈ.வெ.ரா.,

காங்கிரசின் கொள்கைகளை செயல்படுத்திய தற்காக, ஈ.வெ.ரா.,விற்கு பாராட்டு கடிதம் எழுதி னார், காந்தி

ராஜாஜி காலமான போது, இறுதி சடங்கில் பங் கேற்ற, ஜனாதிபதி, வி.வி.கிரி நிற்பதை கண்டார். தன் சக்கர நாற்காலியில் நகர்ந்து சென்று, அவரை உட்கார வற்புறுத்தி, உட்கார வைத்தவர்,

ஈ.வெ.ரா.,

சிறு செலவுக்கும், கணக்கு எழுதி வைப்பார்; சிக்கனமாக இருப்பார். வருமான கணக்கு என வந்த போது, அவர் டைரியை பார்த்து, அதி காரிகள் அதிசயித்து போயினர்

‘அரசியல் வாரிசு யார்?' என, ஈ.வெ.ரா.,விடம் கேட்டபோது, 'வாரிசு என்று யாரும் இல்லை; என் கொள்கையும், கருத்துகளும்தான் வாரிசு' என்றவர்.

இரண்டு கவர்னர் ஜெனரல்கள், ‘1940 மற்றும் 1942 இல், சென்னை மாகாண ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்' என, கூறியபோது, அதை மறுத்தவர், ஈ.வெ.ரா.,

பக்தவத்சலம் முதல்வராக இருந்த போது, திருச்சி கல்லூரிக்கு, ஐந்து லட்சம் ரூபாய் நன் கொடை கொடுத்தார். அப்போது, ஈ.வெ.ரா.,விடம், ‘உங்கள் பெயரை வைக்கிறோம்' என்றதற்கு, அதை மறுத்து, 'இன்னும் பணம் தேவை எனில், தகவல் சொல்லுங்கள்' என்றவர்

மது ஒழிப்பு போராட்டத்தின் போது, தமக்கு சொந்தமான, 500 தென்னை மரங்களை வெட்டி யவர்.

ஆத்திகரான, திரு.வி.க., இல்லம் வந்து தங்கிய போது, அவருக்கு திருநீறு அளித்தவர், ஈ.வெ.ரா!

நன்றி: ‘தினமலர்', 12.2.2018, பக்கம் 8

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner