எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆகா என்ன பொருத்தம்!

இலஞ்ச வழக்கில் கைதான கோவை பாரதியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கண பதியைநீதிமன்றத்திற்கு அழைத்துவந்தபோது, அவர் கையில் சைவ சமயக் குரவர்களுள்ஒருவரான மாணிக்க வாசகரின் திருவாசகம் இருந்ததாம்.

மிகமிகப் பொருத்தம்தான். அரிமர்த்தன பாண்டியன் எனும் மன்னனின் ஆட்சியில் அமைச்சராக இருந்த மாணிக்க வாசகரிடம் குதிரை வாங்க பணம் கொடுத்து அரசன் அனுப்பினான்; மந்திரி மாணிக்க வாசகனோ, குதிரை வாங்கக் கொடுத்த பணத்தைக் கொண்டு கோவில் கட்டினான் - அதுவும் ஊழல்தானே! துணைவேந்தர் கையில் திருவாசகம் இருந்தது - ஆகா, என்ன பொருத்தம்!சிவராத்திரியின் மகிமையைப் பாரீர்!

காளஸ்தி கோவிலுக்குச் சென்று திரும்பியபோது விபத்து:

5 பேர் உயிரிழப்பு

திருப்பதி, பிப்.13  திருப்பதி அருகே டி.என். கன்ரீகா என்ற இடத்தில நடந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். காளஹஸ்தி கோயிலில் சிவராத்திரியையொட்டி சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பியபோது விபத்து ஏற்பட் டுள்ளது. ஆட்டோவும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மதச்சார்பற்ற வேட்பாளர்களுக்கு நாகாலாந்தில்

காங்., ஆதரவு

கோஹிமா, பிப்.13 நாகாலாந்தில், தாங்கள் போட்டியிடாத இடங் களில், பா.ஜ.க.,வை வீழ்த்தும் நோக்கில், மதச்சார்பற்ற கட்சிகளின் வேட்பாளர்களுக்கு, ஆதரவு அளிக்கப்போவதாக, காங்., கூறி யுள்ளது.

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, நாகாலாந்தில், நாகா லாந்து மக்கள் முன்னணி தலைவர், டி.ஆர்.ஸெலியாங் முதல்வராக உள்ளார். 60 உறுப்பினர்கள் உள்ள, நாகாலாந்து சட்டசபைக்கு, 27 இல் தேர்தல் நடக்க உள்ளது. இதில், காங்., 19 இடங்களில் போட் டியிடுகிறது.

இது குறித்து, நாகாலாந்து, காங்., கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

நாகாலாந்து சட்டசபை தேர் தலில்,காங்.,போட்டியிடாததொகு திகளில், மதச்சார்பற்ற கட்சி களின்வேட்பாளர்களைஆதரிப்ப தென, முடிவு செய்யப்பட்டுள்ளது. நாகாலாந்து மக்களின் உரிமை களில், சமரசம் செய்யக்கூடாது; மக்களின் வாழ்வியல் நடைமுறை களில் குறுக்கீடுகள் கூடாது என்ற நோக்கில், இந்த முடிவு எடுக் கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

நாகாலாந்து சட்டசபை தேர் தலில், என்.டி.பி.பி., எனப்படும், தேசியவாத ஜனநாயக முன் னேற்றகட்சியுடன்,பா.ஜ.,கூட் டணி அமைத்துள்ளது. இக் கட்சி, மூன்றுமுறை முதல்வர் பதவி வகித்த, நெய்பியு ரியோ தலைமையில் செயல்படுகிறது. இத்தேர்தலில்,பா.ஜ.,20இடங் களிலும்,என்.டி.பி.பி.,40 தொகுதி களிலும் போட்டியிடுகின்றன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner