எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்ட்டர்வழக்கைவிசா ரித்துவந்தநீதிபதிலோயா, மாரடைப்பால் மரணமடைய வில்லை என்று மருத்துவ ஆவணங்கள்கூறுகின்றனஎன ஆதாரப்பூர்வமாக‘கேரவன்' ஏடுஇப்போதுவிரிவான விவரங்களை வெளியிட்டுள் ளது.

டில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் மருந்து மற்றும் நச்சு அகற்றும் மருத்துவத்துறையின் முன்னாள் தலைவரும், இந்தியாவின் தலை சிறந்த தடயவியல் மருத்துவ அறிஞருமான டாக்டர் ஆர்.கே.சர்மா தான், இந்த அறிக்கையை உறுதிசெய்திருக்கிறார்.

நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு செய்தியும்,அந்த மரணம் குறித்து சுயேச்சையான, பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கையை மேலும் மேலும் வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளன.

நீதிபதி லோயா மரணத் தில் மறைப்பதற்கோ அஞ்சுவ தற்கோஆளுங்கட்சிக்குஏதும் இல்லையென்றால், சுயேச்சை யான - பாரபட்சமற்ற விசார ணையை எதிர்ப்பது ஏன் என்ற கேள்வி முக்கியமானது. நீதிபதி லோயாவின் மரணத்தில் தான் ஒரு அப்பாவி என்று நிரூபிப்பதைத் தவிர பாரதீய ஜனதா கட்சிக்கு வேறு எந்த வழியும் இல்லை.

- --- சீதாராம் யெச்சூரி

பொதுச்செயலாளர்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner