எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நெருப்புடன் விளையாடாதீர்!

பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் என் பெயரைச் சொல்லி தரம் தாழ்ந்த முறையில் விமர்சனம் செய்கிறார். ஒரு பிரதமருக்கு இது அழகல்ல. மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த பி.ஜே.பி. முயலுகிறது. நெருப்புடன் விளையாடவேண்டாம் என எச்சரிக்கிறேன்.

- மாணிக் சர்க்கார், திரிபுரா முதலமைச்சர், சி.பி.எம்.சாக்ஷி மகராஜூவுக்குத் தம்பி எடியூரப்பாவா?

வட கருநாடகாவில் சுற்றுப்பயணம் செய்த காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோழி இறைச்சியை சாப்பிட்டு விட்டு நரசிம்மசாமி கோவிலுக்குச் சென்றுள்ளார். இதற்கு மக்கள், தக்க பாடம் கற்பிப்பார்கள் என்கிறார் கருநாடக பி.ஜே.பி. தலைவரும், மேனாள் முதலமைச்சருமான எடியூரப்பா!

இப்படித்தான் பி.ஜே.பி. எம்.பி.,யான சாக்ஷி மகராஜ் சொன்னார் (2015) ராகுல் காந்தி மாட்டிறைச்சி சாப்பிட்டுவிட்டு கேதார்நாத் கோவிலுக்குச் சென்றார் - அதன் காரணமாக நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட்டது என்றாரே பார்க்கலாம்!

சாப்பாட்டுக்குள்ளும் மூக்கை நுழைத்து வாசனை பார்க்கும் மதம் - உலகில் இந்து மதம்தானோ?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner