எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சபரிமலை அய்யப்பனுக்கு பக் தர்கள் மாலை போடுவது வழக்கம். அதேபோல, சபரிமலை கோவிலுக்குச் செல்பவர்கள் மலை ஏறுவதற்கு முன்னர் பம்பை ஆற்றில் குளிப்பதைப் ‘புனித'மாகக் கருதுவதுண்டு.

ஆனால்,அதேநேரத்தில்பம்பை ஆற்றில் சோப்பு, ஷாம்பு, சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்தி பக் தர்கள் குளித்து வருவதால், பம்பை ஆறு அசுத்தமாகி சுற்றுச்சூழலை கெடுக்கின்றது. இதனை தடுக்கும் நோக்கில், இந்த ஆண்டு பத்தனந் திட்டா மாவட்ட நிர்வாகம் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்த பக்தர்களுக்குத் தடை விதித்துள்ளது. இதனை மீறும் பக்தர்களுக்கு ஆறு ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் பத்தனந்திட்டா மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

‘‘இந்தியாவில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் அய்யப்பனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் கேரளாவின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் கெடாமல் இருக்க ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும்'' என்றும் பத்த னந்திட்டா மாவட்ட நிர்வாகம் பக்தர் களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாயைக்குளிப்பாட்டிநடுவீட் டில் வைத்தாலும் அதுவாலைச் சுருட் டிக்கொண்டு நடுத்தெருவுக்குத்தான் ஓடும் என்று நாட்டில் சொல்லப்படு வதுண்டு.

உண்மையைச் சொல்லப் போனால், ஓர் ஊரில் ஒரு கோவில் திருவிழா என்றால், அந்த ஊரின் சுற்றுச்சூழல் நாசமாகி, அவ்வூரின் இயல்பு நிலை திரும்பப் பல காலம் தேவைப்படும்.

அதுவும் சபரிமலையைப் பொருத்தவரை கேட்கவே வேண் டாம்.‘விடுதலை'எழுதினால் ஏதோ வெறுப்புக் கனல் கொண்டு  வெளியிடுகிறார்கள் என்று ஆத்திரக் காரர்கள் அவசரப்பட்டு சொல்லக் கூடும்.

இதோ ‘இந்து' ஏடு (தமிழ்) வெளி யிட்டுள்ள ஒரு தகவல் (20.12.2013, பக்கம் 2). சிதம்பரத்தைச் சேர்ந்த அய்யப்பப் பக்தர் இரா.இரமேஷ் சங்கர் கூறுகிறார்:

‘‘15 ஆண்டுகளாக சபரிமலைக்குச் சென்று வருகிறேன். கடந்த சில ஆண் டுகளாக மலையில் சுகாதாரம் என்பது வேதனையளிக்கும் வகையில் உள்ளது.

அய்ப்பசி மாத நடைத் திறப்புக்குச் சென்றபோது, பம்பையில் அதிக நீரோட்டம் இருந்தது. ஆனால், அவற்றின் படித்துறை எங்கும் பக்தர்கள் விட்டுச் சென்ற ஆடைகள் அகற்றப்படாமல் கிடந்தன. பம்பையில் உள்ளகழிவறைகள்முழுக்கச் சேறும், சகதியுமாக இருந்தன. துர்நாற்றம் வீசியது. சபரிமலையில் உள்ள நடைப்பந்தலிலும், அதைத் தொடர்ந்து சந்நிதானத்துக்குச் செல் லும் பதினெட்டாம்படி அருகிலும் ஏராளமான காட்டுப் பன்றிகள் சுற்றித் திரிந்தன.... சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்காக தேவசம் போர்டு மற்றும் நன்கொடையாளர்களால் கட்டப்பட்ட விடுதிகள் உள்ளன. இந்தஅறைகளில்உள்ள கழிவறைகள் முறையாகத் தூய்மைப் படுத்தப்படுவதில்லை'' என்று புலம்பித் தள்ளியுள்ளார்.

‘இந்தியா டுடே' (19.12.2007) இதழ் என்ன சொல்லுகிறது?

‘‘பம்பை நதியின் 100 மில்லி லிட்டர் நீரில் 3 லட்சம் எம்.பி.என். கோலி ஃபார்ம் பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

1995-1996 இல் இந்தப் பாக்டீரி யாக்களின் அளவு வெறும் 95 ஆயிரம்தான். இந்தப் பாக்டீரியாவின் அளவு 500 அய்த் தாண்டினாலே அபாயகரமானது என்கிறது ஆய்வு....

பம்பை நதி தீர்த்தம் என்று சொல்லப்படுகையில் இது பெரும் பகுதி மனிதக் கழிவுகளால் மாசுபடுகிறது என் பதுதான் அதிர வைக்கும் உண்மை'' - இவ்வாறு ‘இந்தியா டுடே' கூறுகிறது.

இந்தயோக்கியதையில் பம்பை நதியில் சோப்பு, ஷாம்பு, சீயக்காய்களைப் பயன்படுத்துவதால் தான் புண்ணிய நதி மாசு அடைகிறதாம். சோப்புப் போட்டுக் குளித்தால் 6 ஆண்டு தண்டனையாம் - வாயால் சிரிக்க முடியவில்லை.

கடலில் பெருங்காயம் கரைத்த கதை என்பார்களே அது இதுதானோ!

‘பகவான் அய்யப்பன்' உட்கார்ந் திருக்கும் முறையே அருவருப்பாக இருக்கிறதே!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner