எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஆலந்தூர், பிப்.15 இந்திய விண் வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின்தலைவர்சிவன், சென்னை விமான நிலையத் தில் நேற்று (14.2.2018) செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

சந்திரயான் -2 செயற்கைக் கோளை செலுத்துவதற்கான பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. தற்போது இது தொடர்பான சோதனைகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் முடிந்தபின்னர் சந்தி ரயான்- 2 செயற்கைக்கோளை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சந்திரயான்- 2 செயற்கைக் கோளின் சிறப்பு என்னவென் றால், இது சந்திரனுக்கு சென்று ஒரு பாகம் சுற்றிக்கொண்டு இருக்கும்; மற்றொரு பாகம் நிலைநிறுத்தப்படும்.

ஜி.எஸ்.எல்.வி. எம்.கே.-2 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 செயற்கைக்கோளை மார்ச் மாதம் இறுதியில் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். தேதி இன்னும் முடிவு செய் யப்படவில்லை. சோதனைகள் முடிந்த பின்னர்தான் தேதி முடிவாகும்.

மீனவர்கள்கடலில்செல் லும்போது அவர்கள் இருக் கும்இடம்,எவ்வளவுதொலை வில் உள்ளனர், பாதுகாப்பு எல்லையில் இருக்கிறார்களா என அனைத்தையும் தெரிவிக் கும் வகையில் செயற்கைக்கோள் மூலம் செயல்படுத்த ஏற்ற உயர் தொழில்நுட்பக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த கருவியின் சோதனையும் வெற் றிகரமாக முடிந்து உள்ளது.

முதல் கட்டமாக 500 மீன வர்களுக்கு வழங்க திட்டமிட்டு உள்ளோம். மீனவர்களுக்கு பாதுகாப்பு கருவி வழங்குவது பற்றி அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இஸ்ரோ உருவாக்கி உள்ள மீனவர்களுக்கான கருவியின் மூலம் கடற்கரையில் இருந்து 1,500கி.மீ.தொலைவுவரை தகவல் தொடர்பு பரிமாறிக் கொள்ளமுடியும். இந்தகருவி யைப் படகில் பொருத் திக்கொண்டால் போதுமானது. இந்த கருவி செயல்படுவதற்கு இணையதள வசதியோ, கோபு ரமோ தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner