எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

>>> ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை ஆறு மாதங்களில் அளிக்கப்படும்.

(போவுது போ! 1876 ஆம் ஆண்டில் வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தில் அகழாய்வு நடத்தப்பட்ட ஒன்றுக்கு இப்பொழுதுதான் விடிவு காலமோ!)

>>> எங்களுக்கு உலக நலனும், அமைதியும்தான் முக்கியம்.

- ராஜ்நாத்சிங், மத்திய அமைச்சர்.

(ஆமாம், அதற்காகத்தான் பாபர் மசூதியையே இடித்தோம் என்க!)

>>> வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள வங்கி ஊழியர் சங்கத்தினரைப் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைக்கிறது.

(நல்ல அணுகுமுறைதான். தலைநகரம் டில்லியில் விவசாயிகள் எப்படியெல்லாம் போராடினார்கள் - அப்பொழுது ஏன் அழைக்கவில்லை? இந்துத்துவா கொள்கைப்படி விவசாயம் பாவ தொழிலாயிற்றே!).

>>> கோவில்களைச் சுற்றி வியாபாரக் கடைகள் அகற்றம்.

(பக்தியே பிசினஸ் என்று சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அகில இந்து மாநாட்டில் (1976, மே) ‘அருள்வாக்காகக்' கூறினாரே - அதில் என்ன கடைகள் மட்டும்?).

>>> பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் அச்சம் தீரும் வகையில் பிரதமர் மோடி நாளை உரையாற்றுவார்.

(மோடி ஆட்சியில்  நாடே அச்சத்தில் உறைந்து கிடக்கும்போது, மாணவர்கள் ஒரு பொருட்டா?)

>>> புஷ்பவனம் குப்புசாமிக்கு அரசு தமிழ்நாடு மற்றும் கவின் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவி மறுப்பு - பிரமிளா குருமூர்த்தி நியமனம்.

(என்ன செய்வது புஷ்பவனம் குப்புசாமி சேரியில் பிறந்துவிட்டாரே!).

>>> ஜம்மு - காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில்  உயிர் நீத்த முஜாஹித்கான் குடும்பத்திற்கு பீகார் அரசு அளித்த 5 லட்சம் ரூபாய் நிதியைப் பெற்றிட அவர் மனைவி மறுப்பு!

(இப்படியும் உயர்ந்த  மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்).

>>> தேர்தல் ஆணையர்களின் ஊதியம் இரு மடங்கு உயர்வு!

(இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கும் கீழே உழலுவோர் 29.8 சதவிகிதம்!).

>>> காளஹஸ்தி கோவில் பிரம்மோற்சவத்தில் குழந்தைகள் திருமணத்துக்குத் தடை!

(அப்படியென்றால் இதுவரை குழந்தைகள் திருமணம் (மரப்பாச்சிக் கல்யாணம்) அதிகாரப்பூர்வமாக சட்டத்தை மீறி நடந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்?)

>>> திண்டுக்கல் மாவட்டம் இடைமக்கோட்டை கோவிலில் மகாசிவராத்திரியையொட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு!

(பக்தி வந்தால்தான் புத்தி - அதாவது மூளை போய்விடுமே - மூளையிருந்தால்தானே தேங்காய் உடைப்பதால் பாதிக்கப்படும்!)

>>> இடதுசாரி ஆட்சியில் திரிபுரா பின்தங்கிவிட்டது. பி.ஜே.பி. தாக்கு

(20 ஆண்டுகளாக குஜராத்தை ஆளும் பி.ஜே.பி. ஆட்சியில் மனித வளக் குறியீட்டில் இந்தியாவில் 20 ஆம் இடம்!)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner