எழுத்துரு அளவு Larger Font Smaller Font

>>> மின் வாரியத்தில் வேலை நிறுத்தம் நடந்தாலும், 24 மணிநேரமும் தடையில்லாத மின்சாரம் விநியோகிக்கப்படும். - தங்கமணி, தமிழக மின்துறை அமைச்சர்

(‘பவரில்' இருந்தால் இப்படியெல்லாம் பேசத்தான் செய்வார்கள்)

>>> ஆன்லைன் பத்திரப் பதிவு குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. - அரசு தகவல்

(ஆன்லைனில் இல்லாதபோது அதிகாரிகளுக்கு ‘வசதி'யாக இருந்தது. இப்பொழுது ஆன்லைனில் அறிமுகமான  நிலையிலிருந்து அதில் கோளாறு! கோளாறு எங்கே இருக்கிறதாம்?)

>>> பள்ளிகளில் யோகா பயிற்சி. - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

(‘யோகா' என்ற பெயரில் இந்துத்துவா சமாச்சாரங்கள், சடங்குகள் திணிக்கப்படக் கூடாது!).

>>> உன்னதமான வழக்குரைஞர் தொழில் மோசமான நிலைக்குச் செல்லுகிறது. - நீதிபதி கிருபாகரன்

(நீதிபதிகள், அதுவும் உச்சநீதிமன்ற நீதிபதிகளே சந்தேகத்துக்கு அப்பால் இல்லாதபோது, வழக்குரைஞர்கள் எம்மாத்திரம்?).

>>> சென்னையில் உயிர் பயத்தில் உலவும் ரவுடிகள் சரணடைய போலீசுக்குத் தூது.

(76 ரவுடிகளை ஒரே இடத்தில் பிடித்த சாதனையை சென்னை மாநகரக் காவல் செய்ததால் ஏற்பட்ட பலன் இது!)

>>> சென்னை விமான நிலையத்தில் 74 ஆம் முறையாக கண்ணாடி சரிந்து விழுந்தது.

(தகுதிக்கும், திறமைக்கும் ‘பெயர் போனவாள்' கட்டியது அப்படித்தானிருக்கும்!).

>>> சென்னை பொது மருத்துவமனையில் போலி டாக்டர் கைது!

(அண்ணா பெயரைப் போலியாகப் பயன்படுத்தும் ஆட்சியில் என்னதான் நடக்காது?).

>>> திரைப்படங்களில் நான் நடிக்கப் போவதில்லை என்ற தகவல் சரியானதல்ல. முழுநேர அரசியலுக்கு வந்த பிறகே அதுபற்றி முடிவு செய்வேன். - கமலகாசன்

(ஆமாம், எங்கே தொழில் படுக்கிறதோ அங்கே அதைக் கைவிடுவதுதானே புத்திசாலித்தனம்!).

>>> காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவது - கருநாடக மாநிலத் தேர்தல் வருவதும் ஒரு காரணமாக இருக்கலாம். - தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்.

(இதைத் தமிழக முதலமைச்சர் சொல்ல வேண்டாமா? அங்கே சட்டமன்றத் தேர்தல் - இங்கே பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய அவசியம்)

>>> அரியானா மாநிலத்தில் குழந்தைகள் சென்ற பேருந்தை கலவரக் கும்பல் தீ வைத்து எரித்ததை அம்மாநில அரசு வேடிக்கை பார்க்கலாமா? - ரன்தீப் சுர்ஜேவாலா, காங்கிரசு மூத்த தலைவர்

(குஜராத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் குடலைக் கிழித்து சிசுவை தீயில் தூக்கி எறிந்து குதியாட்டம் போட்ட கும்பலாச்சே!)

>>> இரயில்வேயில் 89 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு! - பியூஸ்கோயல், மத்திய இரயில்வே அமைச்சர்

(இந்தியிலும், இங்கிலீஷிலும் மட்டும் தேர்வு எழுதச் சொல்லி, எல்லா இடங்களையும் இந்தி வாலாக்கள் அடித்துச் செல்ல ஏற்பாடாகத்தானே இருக்கப் போகிறது)

>>> ஆசிரியர்களுக்கு 64 கலைகளும் தெரியவேண்டும். - துணைவேந்தர் சசிரஞ்சன் யாதவ்

(அட அநியாயமே - இதில் காமக்கலை (மோகனம், மதனம்) எல்லாம் உண்டே!)

>>> போக்குவரத்துக் கழகத்தை சீரமைக்க தி.மு.க. கொடுத்த பரிந்துரைகள் புதியவை அல்ல! - அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறை அமைச்சர்

(அப்படியென்றால் அவற்றை செயல்படுத்தி இருக்கலாமே! கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையோ!)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner