எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை என்றால் பார்ப்பனர்களுக்கு ஏன் கோபம் கொப்பளிக்கிறது - 'துக்ளக்'க்கு ஏன் வயிற்றுக் கடுப்பு ஏற்படுகிறது?

"தமிழுக்கு ஒரு பலனும் கிடையாது. அதனால் சில ருக்குப் பலன் இருக்கலாம். தமிழகத்தில் வீடுகளிலிருந்தும், பள்ளிக் கூடங்களிலிருந்தும் தமிழ் மங்கி, மறைந்து கொண்டி ருக்கிறது. இது தமிழுக்குப் பெரும் ஆபத்து. அதற்கு ஏதாவது வகை செய்யாமல், ஹார்வர்டு பல்கலைக் கழகத் தில் தமிழை வளர்க்கிறேன் என்று மார் தட்டிக் கொள்வது அபத்தம்" என்கிறது 'துக்ளக்' (7.2.2018 பக்கம் 17).

இதில் வேடிக்கை என்ன வென்றால் ஹார்வர்டில் சமஸ் கிருதத்துக்கு இருக்கை உண்டு.

"தமிழ் செம்மொழியானால் ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும்" என்று கேலி செய்த கூட்டமல்லவா? ('தின மலர்' வார மலர் 13.6.2004).

திருக்குறளுக்கு உரை எழுதியவர்களிலேயே பரி மேலழகரை உச்சந் தலையில் வைத்துக் கூத்தாடுவார்கள்.

அவர் என்ன எழுதினார் தெரியுமா?

"மனு முதலிய நூல்களில் விதித்தனவற்றைச் செய்தலும் விலக்கியவற்றை ஒழித்தலு மாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூன்று வகைப் படும்" என்கிறார் பரிமேலழகர் என்னும் பச்சைப் பார்ப்பனர் (உரைப்பாயிரம் பக்கம் 4)

"அந்தப் பிர்மாவானவர் இந்த உலகத்தைக்  காப்பாற்று வதற்காக தன் முகம், தோள், தொடை பாதம் இவைகளி லிருந்து உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தார்க்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உப யோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்" (மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 87).

இப்படிப் பிறப்பின் அடிப் படையிலேயே கடவுள் பிர்மா படைத்தார் என்று கூறும் மனுதர்மம் எங்கே? பிறப்பொக் கும் எல்லா உயிர்க்கும் (அத்தி யாயம் 98 குறள் எண் 972) என்று கூறும் திருக்குறளும் எங்கே? எதை எதையோடு ஒப்பிடுவது?

மலரை மலத்தோடு ஒப்பிடுவதா?

ஏதோ பரிமேலழகரோடு இந்தப் பார்ப்பனத்தனம் ஒழிந் ததாகவும் நினைக்க இட மில்லை.

"திருக்குறளில் உள்ள அறத்துப்பால் கிட்டதட்ட பகவத் கீதையின் தமிழாக்கமே ஆகும்" ('தினத்தந்தி' 15.4.2004) என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி  கூறிய தையும் நினைத்துப் பாருங்கள்.

"பார்ப்பனராவது - பார்ப்பனர் அல்லாதவராவது, ஆரியராவது - திராவிட ராவது?" என்று கோணல் வழி காட்டும் கும்மிருட்டு மனி தர்கள் சிந்திக்கட்டும்!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner