எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரூ.11,400 கோடி மோசடி மன்னன் நீரவ் மோடிபற்றி

2015ஆம் ஆண்டு முதலே பிரதமர் மோடி அறிவார்

புகார்களைக் குப்பைத் தொட்டியில் வீசினார் பிரதமர் மோடி

திடுக்கிட வைக்கும் அதிர்ச்சித் தகவல்கள்!

 

புதுடில்லி, பிப்.18 பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி ரூபாய் மோசடி செய்த நீரவ் மோடிபற்றி பிரதமர் மோடிக்கு 2015 ஆம் ஆண்டே தெரியும். ஆனாலும் அவர் மீதான புகார்களை பிரதமர் மோடி கண்டு கொள்ள வில்லை என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட பல வங்கிகளில் மக்களின் பணமான 11,400 கோடி ரூபாயை மோசடிசெய்து தப்பி ஓடிய நீரவ் மோடி குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் 5 மூத்த அதிகாரிகள் பிரதமருக்கு 2015- ஆம் ஆண்டு கடிதம் எழுதியுள்ளனர். இக்கடிதங்கள் அப் போது ஊடகங்களிலும் வெளிவந்தன. ஆனால், பிரதமர் மோடி அந்த அதிகாரிகளின் கடிதத்தை நிறுவன ஆணை யத்திற்கு அனுப்பிவிட்டு ‘‘உங்கள் புகார் முடித்து வைக்கப்பட்டது'' என்று ஒற்றை வரியில் நிறுவன இயக்குநரகம் மூலம் பதில் எழுதி நீரவ் மோடியின் மோசடியை மறைத்துவிட்டார்.

சமூக ஆர்வலரின் தொடர் கடிதம்!

இது குறித்து சமூக ஆர்வலர் அரிபிரசாத் கூறும்போது,

‘‘பஞ்சாப் நேஷனல் வங்கியில் மிகப்பெரிய மோசடி நடக்கிறது. அந்த மோசடிகள் குறித்து பிரதமர் விசாரணை செய்யவேண்டும்'' என்று வங்கியின் மூத்த அதிகாரிகள் 5 பேர் 2015-ஆம் ஆண்டு மோடிக்கு கடிதம் எழுதியிருந் தனர். அந்தக் கடிதம் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் 5 அதிகாரிகள் எழுதிய கடிதத்தை நிறுவனங்களின் கண்காணிப்பு இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு அனுப்பிய கடிதத்திற்கு எந்த பதிலும் வரவில்லை என்று மீண்டும் 2015- அக்டோபரில் நினைவுக்கடிதம் ஒன்றை பிரதமருக்கு அனுப்பினார்கள்.

அதன் பிறகு நிறுவன இயக்குநரகத்தில் இருந்து அவர்களுக்கு ஒரு கடிதம் வந்தது. அக்கடிதத்தில், ‘‘பிரதமரின் கட்டளையின் கீழ் உங்கள் புகார் மனுமீது நடவடிக்கை எடுத்துவிட்டோம். இந்த பிரச்சினை இத் தோடு முடிந்து விட்டது'' என்று ஒரு வரி பதில் கடிதத் தில் நீரவ் மோடியின் மோசடியை மறைத்துவிட்டனர்.

பிரதமர் அலுவலகமே இம்மோசடி குறித்து மவுனம் காத்த பிறகு புகார் அளித்த அதிகாரிகளும் அமைதியாக இருந்துவிட்டனர்.

நிதித்துறை - ரிசர்வ் வங்கிக்கும் புகார் செய்யப்பட்டது

அதன் பிறகு சமூக ஆர்வலர் அரிபிரசாத் இதுவரை மோடிக்கு அனுப்பிய கடிதம், ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் என அனைத்தையும் ஒன்று திரட்டி மீண்டும் மத்திய நிதித்துறை, ரிசர்வ் வங்கி, பிரதமர் அலுவலகம், மற்றும் சிபிஅய்க்கு 2016-ஆம் ஆண்டு ஒரே கோப்பாக அனுப்பியிருந்தார். இந்த கோப்புகள் ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டன.

மேலும் இந்தியாவிவ் மிகபெரிய 31 வங்கிகள் நீரவ் மோடியின் மோசடிக்கு உடந்தையாக இருந்தன. அந்த வங்கி அதிகாரிகள் குறித்த செய்திகளையும் சேர்த்து அனுப்பி இருந்தார்.

ஆனால் அவர் அனுப்பிய கடிதங்கள் எதற்கும் பதில் இல்லை. உடனே மீண்டும் அவர் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் ‘பல்வேறு பத்திரிக்கைகளிடம் சென்றும் நீதி கிடைக்கவில்லை என்றுதான் உங்களிடம் வந் துள்ளோம். ஆனால், நீங்களும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யவில்லை' என்று எழுதியுள்ளார்.

இரண்டாவது கடிதத்தில் எவ்வளவு மோசடி நடந்து இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுகுறித்த கணக்குளை வெளியிட்டு 9,800 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்து இருக்கலாம் என்றும், அதேபோல் அவர் வருமான வரி காட்டாதது குறித்தும் கூறியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு டில்லியில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ‘நான் 2 ஆண்டுகளாக நீரவ் மோடியின் மோசடி குறித்து இந்தியாவின் மிகவும் உயர் பதவியில் உள்ள நபர்களுக்கு தகுந்த ஆதாரங்களுடன் தகவல் தெரிவித்துவிட்டேன், ஆனால் அவை கிணற்றில் வீசிய கல்லாகவே போய்விட்டது.

விஜய் மல்லையா - லலித்மோடி -நீரவ்மோடி

மீண்டும் ஒரு விஜய்மல்லையா, லலித் மோடி உருவாகி மக்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்று விடக்கூடாது ஆகவே, நடவடிக்கை எடுங்கள்' என்று கோரிக்கை விடுத்தேன். ஆனால் மவுனம் தான் பதிலாக கிடைத்தது, மக்களின் பணத்தை கொள்ளையடித்துவிட்டு அவர்கள் மகிழ்ச்சியோடு சுற்றித்திரிகின்றனர். ஆனால் மோடியும், அவரது அரசும் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறது'' என்று சமூக ஆர்வலர் அரிபிரசாத் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, புகார் அளித்த வங்கி அதிகாரிகளும் நீரவ் மோடியின் மோசடிகள் வெளிவந்த பிறகு தாங்கள் பிரதமருக்கு அளித்த புகார் மனுக்கள், அதன்மீது நடவ டிக்கை எடுக்காத மத்திய பாஜக அரசு குறித்தும் ஊடகங் களில் தற்போது பேச ஆரம்பித்துள்ளனர்.

மோசடிக்காரரைப் புகழ்ந்த மோடி

2015-ஆம் ஆண்டு மோசடி புகார் பெற்ற சில நாட் களுக்கு பிறகு டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நீரவ் மோடியின் மாமனார் மோகுல் உடன் பிரதமரும் கலந்து கொண்டார். அப்போது வணிகத்தில் சிறந்தவர் மோகுல் பாய் என்று பிரதமர் புகழாரம் சூட்டினார். அந்தக் கூட் டத்தில் முன்னாள் ரிசர்வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜ னும் கலந்துகொண்டார்.

அப்போது நீரவ் மோடியின் மோசடி குறித்த விவ காரம் ரிசர்வ் வங்கியின் பார்வைக்கும் வந்திருந்தது.  பிரதமர் மோசடி குறித்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பார் என்று ரகுராம் ராஜனும்  நம்பியிருந்தார். ஆனால் மோசடிக்காரர் ஒருவரை அரசு விழாவில் அழைத்து அங்கேயே அவரைப் புகழ்ந்து பேசியது ரகுராம்ராஜனுக்கு அதிர்ச்சியை அளித்தது.

ஒட்டுமொத்த மத்திய அரசும் நீரவ் மோடி மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது. இதைப் பயன்படுத்தி தொடர்ந்து மோச டியில் ஈடுபட்ட விவகாரங்கள் தற்போது வெளியாகி யுள்ளன. ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை மோடி அமைச்சரவை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க வில்லை.

-===================-

“கட்டிப்பிடித்தால் ரூ.11,400 கோடியை சுருட்டிக்கொண்டு தப்பிவிடலாம்!” :ராகுல்காந்தி நையாண்டி

 

 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மக்கள் பணத்தை வைர வியாபாரி நீரவ் மோடி மோசடி செய்து விட்டு ஓடிவிட்டார். இதற்குப் பிரதமர் மோடியும் முக்கிய காரணம்.

இது குறித்து காங்கிரசு தலைவர் ராகுல்காந்தி, ‘‘மக்கள் பணத்தை மோசடி செய்து தப்பவேண்டுமென்றால் மோடியை கட்டிப்பிடியுங்க'' என்று நையாண்டி செய்துள்ளார்.  இது குறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். இதில், ‘‘பிரதமருடன் நெருக்கமாக இருப்பவர்களும், மோடியை கட்டித் தழுவுபவர்களும் தான் இந்தியாவைக் கொள்ளையடிக்கும் மோசடிக்கு வழிகாட்டியாக இருக்கின்றனர். மதுபான அதிபர் விஜய் மல்லையாவைப் போல் முதலில் பிரதமர் மோடியை கட்டித் தழுவுகின்றனர். பின்னர் நாட்டை விட்டு ஓடிவிடுகின்றனர்.

டாவோஸ் மாநாட்டில்....

இந்தியாவைக் கொள்ளையடிக்க வழிகாட்டிய நீரவ் மோடி சுவிட்சர்லாந்து டாவோசில் பிரதமரை கட்டித் தழு வியதை பார்க்க முடிந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி 12 ஆயிரம் கோடி ரூபாயை திருடிக் கொண்டு அரசின் கவனத்தை திசைதிருப்பிவிட்டு விஜய் மல்லையாவைப் போல் நாட்டை விட்டு ஓடிவிட்டார்'' என்று தெரிவித் துள்ளார்.

முன்னதாக கடந்த மாதம் டாவோசில் நடந்த உலகப் பொருளாதார கூட்டமைப்பில் இந்திய சிஇஓ.க்களுடன் பிரதமர் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காங்கிரசு எம்.பி., கவுரவ் கோகோய் டுவிட்டரில் பதிவிட் டிருந்தார். இதைத் தொடர்ந்தே ராகுல் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த குரூப் நிழற்படத்தில் வைர வியாபாரி நீரவ் மோடி 2 ஆவது வரிசையில் நின்றிருந்தார். இதில் பிரதமர் மோடி முதல் வரிசையின் மய்ய பகுதியில் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘‘பிரதமர் மோடியின் வெளி நாடு பயணங்களுக்கு உடன் செல்லும் சிஇஓ.க்கள் எந்த வகையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்?'' என்று கோகோய் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner