எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வங்கி மோசடி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனத்தை கலைக்கவேண்டும்: ராகுல்காந்தி

புதுடில்லி, பிப்.19 வங்கி மோசடி விவகாரத்தில் பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் தங்களது மவுனத்தை கலைக்க வேண்டும் என்று ராகுல்காந்தி என்று கூறினார்.

மும்பையில் உள்ள பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவருடைய வர்த்தக கூட்டாளிகளும் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்தது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த முறைகேட்டை காங்கிரஸ் கையில் எடுத்து பிரதமர் மோடியையும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசையும் கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்த நிலையில் காங்கிரசு தலைவர் ராகுல்காந்தி, வங்கி மோசடி குறித்து நேற்று தனது டுவிட்டர் பதிவில் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

வங்கியில் நடந்த ரூ.22 ஆயிரம் கோடி ஊழலுக்கு பிரதமரும், நிதியமைச்சர் அருண்ஜெட்லியும்தான் காரணம்.

இந்த விவகாரத்தில் மோடியும், அருண்ஜெட்லியும் தங்களது மவுனத்தை கலைக்கவேண்டும். பள்ளி பொதுத் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என்று மோடி 2 மணி நேரம் அறிவுரை கூறுகிறார். ஆனால் ரூ.22 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி பற்றி இதுவரை அவர் 2 நிமிடம் கூட வாய் திறக்கவில்லை.

நிதியமைச்சர் அருண்ஜெட்லி இந்த விவகாரத்தில் ஒளிந்து கொண்டுள்ளார். நீங்கள் குற்ற உணர்வுடன் இருப்பவர் போல் நடந்து கொள்வதை நிறுத்திவிட்டு இதில் உண்மையை பேச முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

வங்கி மோசடிக்கு பிரதமர் மோடிதான் நேரடியாக பொறுப் பானவர், நாட்டின் நிதி நிலை அமைப்பை சீர்குலைவுக்கும் அவர் தான் காரணம் என்று ராகுல்காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டிய நிலையில் அவர் டுவிட்டர் பதிவில் இதுபோல் மீண்டும் கடுமையாக தாக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.நீரவ் மோடி வழியில் விக்ரம் கோத்தாரி

ரூ.800 கோடி மோசடி : வெளிநாடு தப்பியோட்டம்

கான்பூர், பிப்.19 குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 600 கோடியை மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டுக்கு ஓட்டம் பிடித்தார். சிபிஅய்-யும், அமலாக்கத்துறையும் அவரைத் தற்போது தேடிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ரோடோமேக் பெண்ஸ் நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி, 5 பொதுத்துறை வங்கிகளில் 800 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டதாக புகார் எழுந்துள்ளது. கான்பூரில் உள்ள கோத்தாரியின் தலைமை அலுவலகம் கடந்த ஒரு வாரமாக பூட்டப்பட்டிருப்பதாகவும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

விதிகளுக்குப் புறம்பாக கோத்தாரிக்கு பொதுத்துறை வங்கிகளான அலகாபாத் வங்கி, பாங்க் ஆப் இந்தியா,பாங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகியவை கடன் அளித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஓராண்டுக்கு முன்னதாக அலகாபாத் வங்கியிடமிருந்து 352 கோடி ரூபாயும், யூனியன் வங்கியிடமிருந்து 485 கோடி ரூபாயும் பெற்றுள்ள கோத்தாரி, வாங்கிய கடனையும், வட்டியையும் திருப்பிச் செலுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது.இது தொடர்பாக அலகாபாத் வங்கி அதிகாரி ஒருவரைதொடர்பு கொண்ட போது, கோத்தாரியின் சொத்துக்களைவிற்பனை செய்து அதன் மூலம் கொடுக்கப்பட்டுள்ள பணம் மீட்டெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.நீரவ் மோடி விவகாரம் அடங்குவதற்குள் மற்றும்ஒரு தொழிலதிபர் வங்கிகளை ஏமாற்றி பணம் பெற்றுக்கொண்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ள சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையில் தமிழீழம் அமைய

அரசியல் தீர்வு வரவேண்டும்

பினாங்கு துணை முதலமைச்சர் பேட்டி

சென்னை, பிப்.19 இலங்கையில் தமிழீழம் அமைய அரசியல் தீர்வு வரவேண்டும் என்று மலேசிய நாட்டு பினாங்கு துணை முதலமைச்சர் ராமசாமி கூறினார்.

மே 17 இயக்கம் சார்பில் தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெற்றது. மாநாட்டை மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் விரிவாதிக்க கொள்கையும், தமிழீழ விடுதலையின் முக்கியத்துவமும் என்ற தலைப்பில் முதல் அமர்வு நடைபெற்றது. இதனை மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தொடங்கி வைத்தார்.

முன்னதாக பினாங்கு மாகாண துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி அளித்த பேட்டி வருமாறு:-

இந்த மாநாடு நடத்த எத்தனை சிரமப்பட்டு இருப்பார்கள் என்று தெரியும். இலங்கை மக்களுக்கு தமிழீழம் என்பது முக்கியமான ஒன்று. போராட்டத்திற்கு பிரபாகரன் தள்ளப்பட்டார். ஈழத்தில் அப்பாவி தமிழர்களை சிங்கள அரசு கொன்றுகுவித்தது. ஈழ மக்களுக்கு முறையான விடுதலை இல்லை. பல பிரச்சினைகளை இன்னும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாநாட்டின் மூலம் தமிழீழம் அமைய விரைவில் அரசியல் தீர்வு வர வேண்டும். ஏன் இந்த மக்களுக்கு சரியான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இலங்கையில் இனப்படுகொலை நடந்தது கொடூரமானது. இதுகுறித்து சர்வதேச விசாரணை நடத்துவோம் என சொல்லியும் அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழர்கள் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் தான். இலங்கையில் தமிழீழம் அமைவது தான் நோக்கம். அதற்கான அரசியல்தீர்வு, அதற்கான முயற்சி தான் இந்த மாநாடு. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner