எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

2011-ஆம் ஆண்டிலிருந்து 2014-ஆம் ஆண்டுவரை 285 கோடி மட்டுமே நீரவ் மோடி யால் கடன் பெற முடிந்தது, 2014 அக்டோபருக்கு பிறகு 11,400 கோடி கடன் தொடர்ந்து கொடுக்கப்பட் டுள்ளது. 2017 ஜூனி-லிருந்து 2017 செப்டம் பர் வரை 420 கோடி கடன் கொடுக்கப்பட் டுள்ளது.

இவர் மீது உள்துறை அமைச் சரகத்தில் புகார் அளிக்கப்பட்டு சிபிஅய் விசாரணையில் உள்ளது.

இவ்வளவு இருந்தும்

ஜனவரி  ஒன்றாம் தேதி பெட்டி படுக்கைகளுடன் நீரவ் மோடி பெங்களூருவில் இருந்து துபாய் வழியாக ஹித்ரூ (லண்டன்) சென்று அங்கிருந்து சுவிட்சர்லாந்து சென்றார்.

அன்றைய தினம் மாலையே நீரவ் மோடியின் மனைவி டில்லி யில் இருந்து பிராங்புருட் வழியாக சுவிட்சர்லாந்து செல்கிறார். அவரது சகோதரர் நிசால் மோடி மும்பையிலிருந்து சுவிட்சர்லாந்து செல்கிறார்.

ஜனவரி 4ஆம் தேதி நீரவ் மோடியின் மாமாவும் மோடியால் சிறந்த வியாபாரி என்று புகழப்பட்ட கீதாஞ்சலி ஜெம்ஸ் உரிமையாளர் மொகுல் கோசி, ஹாங் காங் சென்று அங்கிருந்து சுவிட் சர்லாந்து செல்கிறார்.

இதனிடையே திடீரென்று அவரது மனைவி மீண்டும்  ஜனவரி 6ஆம் தேதி மும்பை வந்து  வெளிநாடு சென்று விடுகிறார். ஜனவரி 26-ஆம் தேதி டாவோசில் பொருளா தார மாநாட்டில் 22 தொழில் அதிபர்களுள் ஒருவராக மோடியுடன் இணைந்து நிழற்படம் எடுத்துக்கொள் கிறார். நீரவ்மோடி.

இவர்கள் அனைவர் மீதும் மோசடி மற்றும் வங்கி களுக்குப் பொருளாதார விர யம் ஏற்படுத்தியது தொடர் பான ஊழல் புகார்கள்  உள் துறை அமைச்சரகத்திடம் உள்ளன.

சில நாட்களுக்கு முன்பு வங்கி விதிமுறைகள் மாற்றம் குறித்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது அதில் வங்கிகள் திவாலானால் மக்களிடமிருந்தே வசூல் செய்யப்படும் என்பது அந்த புதிய திருத்தம். இப் போது நீரவ்மோடி கொள்ளை யடித்த பணம் மக்களிடமிருந்தே வசூல் செய்யப்படும்.தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner