எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

கான்பூர், பிப். 20-  5 வங்கிகளில் ரூ. 800 கோடி அளவிற்கு கடன் மோசடி செய்தது தொடர்பாக ரோட்டோ மேக் பென் நிறுவனத் தின்முதலாளி விக்ரம் கோத் தாரியை, சிபிஅய் கைது செய் துள்ளது.

குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேசனல்வங்கி யில் ரூ. 11 ஆயிரத்து 600 கோடி முறைகேடு செய்ததுஅண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது. அது அடங்குவதற்கு உள்ளேயே பிர பலமான ரோட்டோமேக் பென் நிறுவன அதிபர் விக்ரம் கோத் தாரி, மும்பையில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கொல்கத் தாவில் உள்ள அலகாபாத் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா,இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் உள்பட 5-க்கும் மேற்பட்ட வங்கிகளில் ரூ.800 கோடிக்கும் மேல் கடன் வாங்கி, திரும்ப செலுத்தாமல் மோசடி செய்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பெற்ற கடனுக்கு ஓராண்டாக வட்டியோ, அசலோ 1 ரூபாய் கூட கொடுக்கவில்லை. அண்மை யில் இவர் கொடுத்த 600 ரூபாய்க் கான காசோலையும் கூட பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. மேலும், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கோத்தாரியின் அலுவலகமும் கடந்த சில வாரங் களாக பூட்டப்பட்டு கிடந்தது.இதனால், லலித் மோடி, விஜய் மல்லையா, நீரவ் மோடிவரிசை யில், விக்ரம் கோத்தாரியும் வெளிநாடு தப்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. நீரவ் மோடி விவகாரத்திற்கு அடுத்த படியாக புதிய பரபரப்பை இது கிளப்பியது. விக்ரம் கோத்தாரி மீதான மோசடி புகாரைத் தொடர்ந்து சிபிஅய் அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. கான் பூரில் விக் ரம்கோத்தாரியின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 3 இடங் களில் சோதனையும் நடத்தியது.

இதனிடையே, தான் வெளி நாடு தப்பவில்லை; கான்பூரில் தான் இருக்கிறேன் என்று விக்ரம் கோத்தாரி தரப்பில் அறிக்கை வெளியாகவே, விரைந்து சென்ற சிபிஅய் அதிகாரிகள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் திங்கட்கிழமையன்று கைது செய் தனர்.நீரவ் மோடி போல விக்ரம் கோத்தாரியும் தப்பிவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவரைக் கைது செய்ததாக கூறியிருக்கும் சிபிஅய் அதிகாரிகள், விக்ரம் கோத்தாரி, அவரது மனைவி மற்றும்மகனிடம் 5 மணி நேரத் துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.இதனிடையே விக்ரம் கோத்தாரி, மொத்தமாக ரூ. 4 ஆயிரத்து 232 கோடி ரூபாய் அளவிற்கு கடன் மோசடிசெய்து இருக்கிறார் என்று புதிய தகவலை வெளியிட்டுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner