எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

** என் தொலைப்பேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. - குலாம் நபி ஆசாத், காங்கிரசு மூத்த தலைவர்

(ஓட்டுப் பெறுவதற்கும், அபவாதம் பேசுவதற்கும் இந்த ஒட்டோ!).

** ஜனநாயகத்தை பா.ஜ.க. மிக உயர்வாக மதிக்கிறது, அதனால் கூட்டணிக் கட்சிகளை வெற்றிகரமாக அரவணைத்து செல்ல முடிகிறது. - பிரதமர் நரேந்திர மோடி

(ஆமாம். பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான சிவசேனா நாள்தோறும் பா.ஜ.க.வின் தோலை உரித்துத் தோரணமாகத் தொங்க விடுகிறதே!).

** வங்கிகளை ஏமாற்றி நீரவ்  மோடி வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிய விடயத்தில் நரேந்திர மோடி வாய்த் திறக்காதது ஏன்? - காங்கிரசு தலைவர், இராகுல் காந்தி.

(மவுனம் சம்மதத்துக்கு அடையாளம் என்ற பழமொழி உண்டே!).

** ரூ.11,400 கோடி புகழ் நீரவ் மோடியின் வீடு, அலுவலகங்கள் அதிரடி சோதனை.

(குதிரை களவான பின் இலாயத்தை இழுத்து மூடிய கதைதான்!).

** பிகாரில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் ஷூ அணிய தடை!

(உடை அணிந்து வரக்கூடாது என்று சொல்லாதவரை மகிழ்ச்சிதான்!).

** முதலமைச்சர் பழனிசாமி தனக்குச் சால்வை அணிவித்த படத்தினை ரவுடி சுசீந்திரன் வெளியிட்டுள்ளார்.

(ஏன் இந்த ரவுடியே

நாளைக்கு முதலமைச்சராக வரமாட்டார் என்று எப்படி சொல்ல முடியும்?).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner