எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவிரி மேலாண்மை வாரியம் விரைவாக அமைக்கப்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்

முதலமைச்சர் தலைமையில் பிரதமரைச் சந்திக்க முடிவு

தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள்

 

சென்னை, பிப்.23- காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை விரைவாக அமைக்க, முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதமரைச் சந்திப்பது என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காவிரி பிரச்சினையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், காவிரி நதிநீரைக் கொண்டு விவசாயம் செய்துவரும் தமிழ்நாடு வேளாண் பெருங்குடி மக் களின் நலனைப் பேணிக் காக்கவும், உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று பிறப்பித்துள்ள தீர்ப்பின்மீது எடுக்கப்படவேண்டியமேல்நடவடிக்கைகள் குறித்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கு ஏதுவாக நேற்று (22.2.2018) காலை 10.30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, அவர்களின் கருத்துகள் பெறப் பட்டு, கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டன.

தீர்மானம் 1:

தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரினை உரிய காலத்தில் வழங்குவதற்கு ஏதுவாக, அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உச்சநீதிமன்றத்தின் 16.2.2018 ஆம் நாளிட்ட தீர்ப் பின்படி, ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்கவேண்டி வலியுறுத்தப்படும்.

தீர்மானம் 2:

உச்சநீதிமன்றத் தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கு, காவிரி நடுவர் மன்றம் இறுதி ஆணையில் வழங்கிய நீரில், 14.75 டிஎம்சி அடி நீரை குறைத்து, கருநாடகத்திற்குக் கூடுதலாக வழங்கிட உத்தரவிட்டது குறித்து, அனைத்துக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளை முழுமையாக ஏற்றுக் கொண்டு, சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தீர்மானம் 3:

மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில், அனைத்துக் கட்சித் தலைவர்கள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவுடன், மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களை விரைவில் நேரில் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்கவும் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பிலுள்ள தமிழ்நாட்டிற்கு சாதகமான அம்சங்களை உடனடியாக நிறைவேற்றித் தருமாறும் வலியுறுத்தப்படும்.

மேற்கண்ட மூன்று தீர்மானங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்

பட்டன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner