எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பா.ஜ.க. ஆட்சியின் பார்ப்பனத்தனம்

‘பேய்' பயம்: ராஜஸ்தான் தலைமை செயலகத்தில் யாகமாம்!

 

ஜெய்ப்பூர், பிப் 24 ‘பேய்' பயம் காரணமாக ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்தப்பட்டதாம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க அரசு ஆட்சியில் உள்ளது. வசுந்தரா ராஜே முதல்வராக உள்ளார். இந் தாண்டு அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் பா.ஜ.க அரசு மும்முரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே அந்தமாநிலச்சட்டமன்றஉறுப் பினர்கள் ‘பேய்' பயத்தில் உறைந்துள் ளனராம்.

இதுகுறித்து அவர்கள் முன்வைக் கும் காரணங்கள் பின்வருமாறு...

ராஜஸ்தான் சட்டப்பேரவையின் கூட்டங்களில் 200 சட்டமன்ற உறுப் பினர்களும் வருகை தந்து நீண்ட நாள்கள் ஆகிவிட்டன. எம்.எல்.ஏ இறப்பு, எம்.எல்.ஏ-க்கள் மீது காவல்துறையினர் வழக்குஎன சட்டப்பேரவையில்முழு வருகைப்பதிவு இருப்பதே கிடையாது.

ராஜஸ்தான் மண்டேல்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கீர்த்தி குமாரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தார்.

நத்வாரா சட்டமன்ற உறுப்பினர் கல்யாண் சிங் உடல்நலக்குறைவால் கடந்த வாரம் உயிரிழந்தார். இதுபோல் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்துஉயிரிழந்ததுஅவர் களிடையே பயத்தை அதிகரித்துள்ள தாம்.

மேலும் சில சட்டமன்ற உறுப்பி னர்கள் மூன்று பேர் கொலை மற்றும் பாலியல் வழக்குகளில் சிறைக்குச் சென்றுவிட்டனர்.

இதனால் ராஜஸ்தான் தலைமைச் செயலகத்தில் தீய சக்திகள்(?) நடமாடு வதாகவும் யாகம் நடத்தி பேய்களைத் துரத்த வேண்டும் என்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் வசுந்தரா ராஜேவிடம் வேண்டுகோள் விடுத்துள் ளனராம்.

இதுபற்றி நகவூர் தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,

‘ராஜஸ்தானின்தலைமைச்செய லகம் அமைந்துள்ள இடம் ஒரு காலத்தில் இடுகாடாக இருந்தது. எனவே, அங்கு ‘பேய்' நடமாட்டம் உள்ளதும் இறந்த பலர் தங்களின் ஆத்மா சாந்தி அடையாமல் சுற்றிக்கொண்டு இருக்கின்றனர். ஆகவே வரும் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு தலைமைச் செயலகத்தில் இருந்து ‘பேய்'களை ஓட்டவேண்டும், மேலும் சில கெட்ட காரியங்கள் நிகழ்ந்ததால் வளாகத்தில் பெரிய யாகம் ஒன்றை நடத்தவேண்டும். இது குறித்து ஏற்கெனவே முதல்வர் வசுந்தரா ராஜேவிடம் கூறியுள்ளோம், அவரும் இது குறித்து ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார் என்று கூறினார். சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் சட்டப்பேரவை வளாகத் தில் யாகம் நடைபெற்றது. இந்தக் காட்சி ஒரு தொலைக்காட்சியில் வெளியானது இது குறித்து ராஜஸ்தான் அரசு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

 

இந்நாள்...இந்நாள்...

 

1848 - பிரஞ்சு புரட்சி வெடித்த நாள்

1980  - காஞ்சிபுரத்தில் சங்கராச்சாரி மடம் எதிரில் தந்தை பெரியார் சிலை திறப்பு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner