எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பணமதிப்பு நீக்கத்துக்கு சில மணிநேரத்திற்கு முன்பு

நீரவ் மோடி ரூ.90 கோடி டெபாசிட்

தேசியவாத காங்கிரசு எம்பி குற்றச்சாட்டு

மும்பை, பிப்.26 பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.90 கோடியை நீரவ் மோடி முதலீடு செய்திருப்பதாக தேசியவாத காங்கிரசு கட்சியின் மக்களவை உறுப்பினர் மஜித் மேமன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

பணமதிப்பு நீக்கம் 2016 ஆ-ம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி இரவு எட்டு மணிக்கு அறிவிக்கப்பட்டது. அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்தத் தொகை டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. இதற்குப் பதிலாக தங்கம் உள்ளிட்டவற்றை மாற்றி இருக் கலாம். இதுகுறித்து முறையான விசாரணை தேவை என்று கூறியவர், மத்தியில் இருக்கும் பாஜக தலைமையிலான அர சாங்கத்துக்குத் தெரியாமல் இந்த முதலீடு நடந்திருக்காது என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்.

நீரவ் மோடி மீது ரூ.11,400 கோடி மற்றும் ரூ.280 கோடி மோசடி வழக்கினை பஞ்சாப் நேஷனல் வங்கி தொடுத்திருக் கிறது. நீரவ் மோடி மட்டு மல்லாமல் அவரது குடும்ப உறுப்பினர்கள், நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருக் கும் பணியாளர்கள் என பலரும் இந்த வழக்குத் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த வழக்குப் பதிவு செய்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே நீரவ் மோடி இந்தியாவில் இருந்து வெளியேறிவிட்டார். காங்கிரசு தலைவர் ராகுல் காந்தியும் இதேபோன்ற குற்றச்சாட்டினைச் சில நாள்களுக்கு முன்பு கூறி யிருந்தார். பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சமயம் இந்த மோசடிக்கான ஆரம்பகாலம் ஆகும். மக்களிடம் இருந்த மொத்தப் பணமும் வங்கி களுக்கு சென்றுவிட்டது. அரசின் உயர்மட்ட அளவிலான பாதுகாப்பு இல்லாமல் வங்கி மோசடி நடந்திருக்காது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner