எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவிரி பிரச்சினை:

அனைத்துக் கட்சி தலைவர்களுடன் விரைவில்

டில்லி சென்று பிரதமரை சந்திப்பேன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

 

சென்னை, பிப். 26 காவிரி விவகாரம் குறித்து டில்லி சென்று பிரதமரை விரைவில் சந்திக்க இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி நேற்றிரவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காவிரி நதிநீர் விவகாரம் குறித்து மத்திய அமைச்சரிடம் தெரிவித்தேன். சட்டப்படி தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். உச்சநீதிமன்றம் தெரிவித்த தீர்ப்பை நடை முறைப் படுத்துவதற்கு, அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் பிரத மரை சந்தித்து கோரிக்கை வைப்போம் என்று தெரிவித்திருக்கின்றோம். இது தொடர்பாக பிரத மருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம்.

நேரம் கிடைத்த உடன் பிரதமரையும், டில்லி யில் வைத்து நீர்வளத்துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து உச்சநீதிமன்றம் அறிவித்த கால அவகாசத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு வலியுறுத்துவோம் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner