எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோயிலில்

தங்க முலாம் பூசிய குடை திருட்டு

புதுடில்லி, மார்ச் 5 டில்லி ஹாஸ் காஸ் பகுதியில் உள்ள சாய் பாபா கேயிலில் பாபாவின் சிலை மீது வைக்கப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி குடை திருடுபோனது. குடையை மர்ம  நபர் திருடிசெல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதனைகொண்டு கெள்ளையர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  ஹாஸ் காஸ் சாய் தாம் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள்  வழிபாட்டுக்காக வந்து செல்வது வழக்கம். சனி, ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், கோயில் அர்ச்சகர்கள் ஹோலி பண்டிகையன்று அதிகாலையில் கோயிலை திறந்து பார்த்தபோது பாபாவின் மீதிருந்த  தங்க குடை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி பின்னர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிசிடிவி பதிவுகளை கைப் பற்றிஅவற்றை ஆய்வு செய்தனர். அப்போதுதான் இந்த திருட்டு தெரியவந்தது.  இதுகுறித்து வழக்குப் பதிந்து காவல்துறையினர் சிசிடிவி பதிவின் அடிப்படையில் திருடனை தேடி வருகின்றனர்.வயலில் வீசப்பட்ட பஞ்சலோக கடவுளர் சிலைகள்

ராம்நகர், மார்ச் 5 ராம்நகர் மாவட்டம், கனகபுரா தாலுகா, பூவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் உமேஷ். இவர் நேற்று காலை தனது வயலுக்கு வந்தார். அப்போது வயலில் ஒரு மூட்டை இருந்தது. மூட்டையை பிரித்துப் பார்த்தபோது அதில் பஞ்சலோக சிலைகள் இருந்ததை கண்டு உமேஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து சாதனூரு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். காவல்துறையினர் மூட்டையை பிரித்து பார்த்தபோது, அதில் பஞ்சலோக சிலைகள் இருந்தன. இது குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மீட்கப்பட்ட சிலைகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, யார் கொண்டு வந்து வயலில் வீசினர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், கொள்ளையர்கள் கோயிலில் இருந்து பஞ்சலோக கடவுளர் சிலைகளைத் திருடி மூட்டையாக கட்டி கடத்தியுள்ளனர். ஆனால், அவ்வழியே, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சோதனைச்சாவடி இருக்கிறது. எனவே, அவ்வழியே சென்றால் சோதனைச் சாவடியில் உள்ளவர்களிடம் கிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில், கொள்ளயடிக்கப்பட்ட சிலைகள் இருந்த மூட்டையை வயலில் வீசி விட்டு சென்றிருக்கலாம் என கருதுகிறோம். கொள்ளையர்களை கைது செய்து விசாரணை நடத்திய பின்னர்தான் அவர்கள் யார் என்பதும், எந்த கோயிலில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டது என்பதும் தெரியவரும் என காவல்துறையினர் கூறினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner