எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நாக்பூர், மார்ச் 6 மத்தியிலும், மராட்டிய மாநிலத்திலும் பாஜக அரசு  உள்ள நிலையில் 109 கல்லூரிகள் மூடப்படும் நிலை யில் உள்ளன.

கலை மற்றும்

அறிவியல்கல்லூரிகள்

மராட்டியமாநிலத்தில் நாக்பூர் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்று இயங்கி வந்த கலை மற்றும் அறிவி யல்கல்லூரிகளில்109கல் லூரிகள் தற்பொழுது மூடப் படுகின்றன.நாக்பூர்பல்கலைக் கழகத்திடமிருந்துஅங்கீகாரத் தைப் புதுப்பிக்கத தவறியதால் 109 கல்லூரிகள் அக்கல்லூரி களின் அனுமதியை  நாக்பூர் பல்கலைக்கழகம் விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது. அதன்மூலம் 109 கல்லூரிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப் பட்டன.

பிசிஏ, பிசிஎஸ், பிசிசிஏ மற்றும்பிறஅறிவியல் தொழில்நுட்பப் படிப்புகள் தொழில்வாய்ப்புள்ள படிப்பு களாக மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குள் ஏராளமான கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

நாக்பூர் பல்கலைக்கழகத் தின்கீழ் மட்டும் சுமார் 750-க் கும்மேற்பட்டகல்லூரிகள்புதி தாகதொடங்கப்பட்டு இயங்கி வந்தன. கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் மாண வர் சேர்க்கை வெகுவாக குறைந்ததையடுத்து, மாணவர் சேர்க்கை இல்லாமலே, இருப் பதுபோன்று போலியாக சில கல்லூரிகள் இயங்கிவந்தன. மேலும், பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம்கோராமலே150 கல்லூரிகள் இயங்கிவந்தன. அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வந்த கல்லூரிகளுக்கு நாக்பூர் பல்கலைக்கழகத்தின்சார்பில் தொடர்ச்சியாக கடிதங்கள் அனுப்பப்பட்டும், அக்கல்லூரி களிடமிருந்து எவ்வித பதி லும்கிடைக்கவில்லை.அங்கீகாரமற்ற கல்லூரிகள் மூடப்படுகின்ற நிலைக்கு தள் ளப்பட்டன.

 இந்நாள்...இந்நாள்...

1967- முதன்முதலாக தி.மு.க. அமைச்சரவை பதவியேற்பு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner