எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெங்களூரு, மார்ச் 6 அயோத்தி யில் ராமர் கோவில் அமைக்கப் படாவிட்டால் இந்தியாவும் இன்னொரு சிரியாவாக மாறும் என கார்ப்பரேட் சாமியாரும் வாழும் கலை அமைப்பின் அமைப்பாளருமான சிறீசிறீ ரவிசங்கர் கூறியுள்ளார்.

அயோத்தியில்ராமர் கோவில் அமைப்பது குறித்த விவகாரம் உச்சநீமன்றத்தில் நிலுவையில்உள்ளது. வாழும் கலை அமைப்பின் அமைப்பாளர் சிறீசிறீ ரவிசங் கர்இந்தவிவகாரத்தில் வெளி யிலிருந்துதீர்வுகாணும் புதிய ஏமாற்று முயற்சியில் ஈடு பட்டுவருகிறாராம்.

பல்வேறு காலகட்டங்களில் சுமார் 500 மதத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள் ளாராம். இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு வெளியில் சுமுகமாக முடிக்க முயன்று வருவதாகவும் அவர் தெரிவித்து வருகிறார். இதற்கிடையில் சையத் சல்மான் ஹுசைன் நத்வி என்னும் இசுலாமியப் பிரமுகர் ஷரியா சட்டப்படி பாபர் மசூதியை வேறு ஒரு இடத்துக்கு மாற்றி விடலாம் என கருத்து தெரிவித்தார். அதற்காக அவரை அகில இந்திய இசுலாமிய சட்ட வாரியம் அந்த அமைப்பில் இருந்து நீக்கியது. அவரையும் சமீபத்தில் சிறீசிறீ ரவிசங்கர் சந்தித்தார்.

சிறீசிறீரவிசங்கர்இசுலாமிய அமைப்புகளின் தலைவர்களி டையே மோதலை உருவாக்கி, பாபர் மசூதிக்காக ஒன்றுபட்டு நிற்கும்இசுலாமிய அமைப்பு களிடையே பிளவை உண்டாக் கும்முயற்சியில்சிறிதுவெற்றி கண்டு வருகிறார். மேலும் இசு லாமியர்கள் ராமர் கோவிலுக்கு நிலத்தை விட்டுக்கொடுத்தால் இந்த உலகம் அவர்களைப் பாராட்டும் என்று கூறியிருந் தார். இருப்பினும் இந்த விவகாரத்தில் இசுலாமிய அமைப்புகள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

இந்நிலையில் சிறீசிறீ ரவிசங்கர் ஒரு ஆங்கில ஏட் டுக்கு பேட்டி அளித்துள்ளார்.  அதில்,‘‘நான்நத்விக்குபணம் கொடுத்ததாகவந்ததகவல்கள் தவறானவை. அவர் இசுலாமி யர்களுக்கு ராமர் கோவில் உள்ள இடத்தில் உரிமை இல்லை என்பதை தெரிந்து கொண்டு அவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். அதில் தவறே தும் இல்லை.

இசுலாமியர்கள் அந்த இடத்தில் தங்களுக்கு உரிமை இல்லை என்பதை உணர்ந்து கொண்டுஅவர்களாகவே அங் கிருந்துவிலகவேண்டும். அவ்வாறுநடைபெறவில்லை எனில் இந்தியா இன்னொரு சிரியாவாக மாறிவிடும்.  நல் லெண்ணத்தின் அடிப்படையில் இசுலாமியர்கள் அந்த இடத்துக்கு உரிமை கோருவதை கைவிட வேண்டும்.   அயோத்திக்கும், இசுலாமியர்களுக்கும்சம்பந் தம் இல்லை. ராமர் பிறந்த இடம்அது.அங்குதான் அவருக்கு கோவில் எழுப்ப முடியும்.அதேபோல அங்குஇருமதங்களுக்கும் பொது வாக மருத்துவமனை அமைக்கலாம்எனசிலர் சொல்வதும் அர்த்தமற்றது. இதனால் சர்ச்சைகள் இன் னும் அதிகமாகும்'' எனத் தெரி வித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner