எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவிரி விவகாரம்

நாடாளுமன்ற வளாகத்தில்

அ.தி.மு.க.- தி.மு.க. எம்.பி.க்கள் இணைந்து ஆர்ப்பாட்டம்

புதுடில்லி, மார்ச் 6 உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரி நீரை தமிழகத்திற்கு பகிர்ந்து அளிக்க, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலும் எதிரொலித்தது. காவிரி விவகாரம் தொடர்பாக மக்களவையில் அ.தி.மு.க. சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது. அ.தி.மு.க. எம்.பி.க்கள் வேணுகோபால், குமார், அரி, அருண்மொழிதேவன், சத்தியபாமா உள்ளிட்டோர் அந்த நோட்டீசை அளித்தனர்.

அதேசமயம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் எம்.பி-க்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பதாகைகளை ஏந்தி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner