எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆரியமே! ஆணவமே! ஓடு! ஓடு!!

- எழுத்தாணி -

எங்கெங்கு நோக்கினும் எங்கள் பெரியாரடா!

அவர் ஏழு கடல் தாண்டிடும் ஏவுகணையடா!

இமய எதிர்ப்பையும் உரமாக்கி வளரும் விந்தையடா!

எழுச்சி என்ற பொங்கும் எரிமலை சீற்றமடா!

கைபர் கணவாய்க் கூட்டமே,

சைபரில் சிக்கித் தவிக்கும் வாட்டமே,

உன் நரித்தனம், எம்மறத் தனத்தால் தூள்! தூள்!

காவிகளின் காலித்தனத் திட்டங்கள் ஒருபோதும்

எங்கள் தமிழ்நாட்டில் பலிக்காது; பலிக்காது!

அமைதிப் பூங்காவாம் பெரியார் மண்ணைக் காக்க

ஆயிரமாயிரம் இளைஞர் பட்டாளம்

பெரியார் பாயிரம் பாடி புறப்பட்டு விட்டது!

ஒதுங்கிப் போ! ஓடிப் போ!!

பொய்ப் புழுதியில் புரண்டிடும் பொல்லாங்கே!

புறப்படு உன் பழைய இடத்திற்கு என

இனி எங்கள் இளைஞர்கள் முழங்குங்காலம்

விரைந்து வரும்! எதிர்காலத்தில்

உன் கல்லறைக்குக்கூட இங்கே இடமிருக்காது!

எனவே போ! போய் அதற்கும் இடந்தேடு!

கந்தக பூமியில் கனற்பொறி பட்டால்

விளைவு என்ன?

விளையாடாதே! விளையாடாதே!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner