எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாநிலங்களவையில் டி.கே.ரங்கராஜன்

 

புதுடில்லி, மார்ச் 10- மகளிர் முன் னேற்றத்திற்காக எப்படி யெல்லாம் தந்தை பெரியார் பாடுபட்டார் என்பதை அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்த்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங் களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. வியாழனன்று (மார்ச் 8) காலை மாநிலங் களவையில் பன்னாட்டு மக ளிர் தினம் கடைப்பிடிக்கப்பட் டது. அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் தங்கள் கருத்துக் களை முன் வைத்தார்கள். அப்போது டி.கே.ரங்க ராஜன் பேசியதாவது: பன்னாட்டு மகளிர் தினம் என்பது ஒரு சடங்கு போன்று இருந்திடக் கூடாது. கடந்த 60,70 ஆண்டு களில் பெண்களின் வாழ்க்கை யில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஆனால் மிக வும் அற்ப அளவில்தான்  அதா வது 0.001 சதவீதம் அளவிற்குத் தான்  முன்னேற்றம் ஏற்பட்டி ருக்கிறது.

அதேசமயத்தில் பணியிடங் களில் பெண்கள் துன்புறுத்தப் படுவது என்பது குறைய வில்லை. சொல்லப்போனால் முன்பைவிட மிகவும் மோச மான முறையில் இருக்கிறது. பெண்களின் பாதுகாப்பிற்காக நாம் சட்டங்களைப் பெற் றிருக்கிறோம். எனினும், சட் டத்தை அமல்படுத்த வேண்டிய அமைப்புகள் மிகவும் பல வீனமாக இருக்கின்றன. பெண் களின் வழக்குகளில் நீதிமன் றங்கள் நீதியை வழங்குவது இல்லை. பெண்களின் முன் னேற்றம் குறித்து தந்தை பெரியார் எழுதியவை, பேசி யவை அனைத்தும் இந்தியா வில் உள்ள அனைத்து மொழி களிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப் போதுதான் பெண்களின் முன்னேற்றத் திற்காக தந்தை பெரியார் எப்படி பாடு பட்டார் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். இறுதியாக, பெண்களின் முன் னேற்றத்திற்காக தொலைக் காட்சி ஊடகங்களையும், பத்திரிகை ஊடகங் களையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்களின் முன் னேற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் அய்ந்து நிமிடங்களை அல்லது பத்து நிமிடங்களை தொலைக்காட்சிகள் ஒதுக்கிட வேண்டும். இவ்வாறு டி.கே.ரங்கராஜன் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner