எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பெங்களூரு, மார்ச் 12  வங்கி மோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய அனைவருமே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வர்கள், தொடர்ந்து விசாரணை அமைப்புகளுக்கு புகார் அளித் தும் விசாரணை அமைப்பு அமைதியாக வேடிக்கை பார்த் தது ஏன்? என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெங்களூருவில்  முன்னாள் நிதி அமைச்சர், தான் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய போது,  அப்போது, 2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக அப் போதைய தலைமை மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி, மிகைப்படுத்தப்பட்ட குற்றச் சாட்டைஅறிக்கையாகஅளித் தார். வர்த்தக ரீதியாக அணுகப் பட வேண்டிய விஷயத்தை சில அரசியல் கட்சிகள் திரித்துக் கூறி அரசியல் ஆதாயம் தேடின. அதற்கான விலையை அரசியல் களத்தில் காங்கிரசு கொடுத்துவிட்டது என்றார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சமீபத்தில்ரூ.12,500கோடிமோசடி நடந்துள்ளது. இந்த மோசடி அனைத்தும் ஒரே துறையான நகைகள் தயாரிக்கும்,விற்பனை செய்யும் துறையில் நடந்துள்ளது. இந்த மோசடியின் முக்கிய குற்றவாளிகள் அனைவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வர்கள்.

ஒரேமாநிலத்தைச்சேர்ந்த வர்கள் செய்த குற்றத்திற்கு பல்வேறு தரப்பட்ட அதிகாரி களும் மக்களும் அவர்களுக்கு உதவி இருக்கலாம். நீரவ் மோடிக்கு குஜராத்தில் இருந்து யார் உதவினார்கள், எப்படி உதவினார்கள் என்பன குறித்து எனக்குத் தெரியவில்லை என கூறினார்.

இந்தியாவில் நடந்த பெரும் பொருளாதார மோசடிகள் அனைத்தும் குஜராத்தில்தான் நடந்துள்ளன. பங்குவர்த்த மோசடிக்காரரான அர்ஷத் மேத்தா முதல் முன்னாள் இந்திய மருத்துவ ஆணையத்தின் தலைவர் கேத்தன் தேசாய்வரை அனைவரும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். பல கோடி ரூபாய்களை லஞ்சமாகப் பெற்று தனது அகமதாபாத் இல்லம், சூரத் அலுவலகம், ராஜ்கோட் சொகுசு மாளிகைகளில் கோடி கோடியாக பணம், தங்கம், வைரம் போன்றவற்றை பதுக்கி வைத்தவர். இந்த கேத்தன் தேசாய் தற்போது உலக மருத்துவ ஆணையத்தின்இந்தியத்தலை வராகமோடியால்நியமிக்கப் பட்டுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner