எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராஜீவ் காந்தி கொலை வழக்கு:

ராகுல் காந்தி குடும்பமே மன்னித்துவிட்ட நிலையில்

தண்டனை பெற்று வருவோரை விடுதலை செய்க!

விருத்தாசலத்தில் கழகத் தலைவரே முன்மொழிந்த சிறப்புத் தீர்மானம்!

விருத்தாசலத்தில் நேற்று (11.3.2018) நடைபெற்ற திராவிடர் கழக இளைஞரணி மாநிலக் கலந்துரையாடலில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்மொழிந்த சிறப்புத் தீர்மானம் வருமாறு:

‘‘ராஜீவ் காந்தி கொலை வழக்கு சட்டப்படி சரியான முறையில் நடத்தப்பட வில்லை என்ற கருத்தை உச்சநீதிமன்ற நீதியரசர் கே.டி.தாமஸ் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை அதிகாரிகள், தம் கடமையை சரிவரச் செய்யவில்லை என்பதை காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராஜன் என்பவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருப்பவர்களை நாங்கள் மன்னித்துவிட்டோம் என்று அகில இந்திய காங்கிரசு கட்சியின் தலைவரும், ராஜீவ் காந்தி அவர்களின் மகனுமான திரு.ராகுல் காந்தி அவர்களே  அண்மையில் சிங்கப்பூரில் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட நளினி அவர்களுக்கு ஏற்கெனவே மன்னிப்பு அளித்து சோனியா காந்தி அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  ராஜீவ் கொலையில் தண்டனைப் பெற்றுவரும் அனைவருக்கும் பொது மன்னிப்பு அளித்து அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.''

- (அனைவரும் எழுந்து நின்று) பலத்த கரவொலிக்கிடையே இந்தத் தீர்மானம் நிறைவேறியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner