எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாஜக ஆளும் உ.பி.யில் கொடூரம்

தலித் பெண் உயிருடன் எரிப்பு

தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி கண்டனம்

 

புதுடில்லி, மார்ச் 12 சர்வதேச மக ளிர் தினமான மார்ச் 8 அன்று பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 40 வயதுள்ள தலித் பெண் ஒருவர் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறி உயிருடன் எரிக்கப்பட்டுள்ளார். கந்துவட்டிக்காரன் ஒருவனிடம் வாங்கிய கடனை, வட்டியுடன் கட்டத் தவறியதற்காக இவ்வாறு கொடூரமான சம்பவம் நடந் துள்ளது. இதற்கு தலித் ஒடுக்கு முறை விடுதலை முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

பத்திரிகைகளில் வந் துள்ள செய்திகளின்படி,உத்தரப்பிரதேச மாநிலம்பலியா மாவட்டத்தில் இக்கொடூர சம்பவம் நடந்துள் ளது. சுமார் 80 சதவீதம் தீப்புண் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள அப்பெண்மணி மருத்துவமனை யில் மிகவும் ஆபத்தான நிலை யில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கந்துவட்டிக்காரர்களான சுத்துசிங்மற்றும்சோனு சிங்ஆகியோர்ஜாஜெவுலிகிரா மத்தில்வீட்டிற்குவெளியே வராந்தாவில் தூங்கிக்கொண் டிருந்த அப்பெண்ணின் மீது மண்ணெண்ணெய்யைஊற்றி எரித்துள்ளனர். இச்சம் பவம் மார்ச் 8 அன்று நடந்துள்ளது.மேற்படி கயவர்கள் இருவரையும் தலித்/பழங்குடியினர் வன்கொடுமைத் தடைச்சட்டத்தின்கீழ்வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அப்பெண்ணிற்கு ஆகும் மருத் துவச் செலவுகளை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தீக்காய மடைந்த பெண்ணின் குடும்பத் திற்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன் னணி கோரியுள்ளது.இந்நாள்...இந்நாள்...

1907 - முனைவர் மு.இராசமாணிக்கனார் பிறப்பு

1925 - சன்யாட்சன் மறைவு

1939 - இந்தி எதிர்ப்பு வீரர் தாளமுத்து மறைவு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner