எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

>> கேரள மாநிலத்தில் அரிசி திருடியதாக ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடி இன இளைஞர் மதுவின் வீட்டுக்கு கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

(அப்படிப் பார்க்கப் போனால் தமிழ்நாட்டில் நமது முதல் அமைச்சருக்கு நாள் ஒன்றுக்கு 24 மணி நேரமும் போதாதே!).

>> ரேசன் கடை

வேலைக்குப் பணம் கொடுத்து ஏமாறாதீர்! - தமிழக அரசு அறிக்கை

(அதிமுக அரசின் ஆட்சி நிலை எந்தளவில் இருக்கிறது என்பதற்கான நிலைக் கண்ணாடி இது!)

>> அரசு கல்லூரிகளில் 200 கவுரவ விரிவுரையாளர் நியமனத்தில் முறைகேடு!

(பணம் கொடுத்தால் கிடைக்கும் - இதில் என்ன கவுரவம் வேண்டிக் கிடக்கிறது?)

>> பிராமணருக்கு ஜாதி சான்றிதழ், அரசு பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்.

(பிராமணன் என்றால் வருணமே தவிர ஜாதியல்லவே! வேண்டுமானால் அய்யர், அய்யங்கார் என்று கேட்கட்டும்!)

>> தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது (1000க்கு 943)

(இதற்குள்ளும் தந்தை பெரியார் அவர்களின் பெண்ணியல் கருத்துக்கும் கூடத் தாக்கம் இருக்கிறதே!)

>> சென்னை தண்டையார்பேட்டையில் அரசுப் பேருந்தில் படிக்கட்டில் விளையாடிய போது பள்ளி மாணவர் மரணம்!

(விளையாட்டு வினையாயிற்று என்பது இது தானோ! கல்வி என்பது மார்க்கு வாங்குவது தானா?)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner