செய்தியும் - சிந்தனையும்
மதக்கலவரம்?
செய்தி: அனைத்து மத சம்பந்தமான நூல்களைப் பள்ளியில் போதித்தால் மதச்சார்பின்மை, தானாகவே ஏற்பட்டு விடும்.
- மேனகா காந்தி, மத்திய அமைச்சர்
சிந்தனை: அவ்வளவுதான்! பள்ளிக் கூடத்திலேயே மதக் கலவரங்கள் ஏற்பட்டுவிடுமே!
இன்றைய ஆன்மிகம்?
உலகத்துக்கே பொருந்துமா?
நம் உள்ளங்கையின் விரல் நுனியில் லட்சுமியும், மத்தி யில் சரசுவதியும், கடைசியில் துர்க்காதேவியும் உள்ளனர். காலையில் எழுந்தவுடன் உள்ளங்கையைக் கண்களால் பார்ப்பது நல்லது.
‘தினமணி', 21.9.2010
இது இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமா? அல்லது உலகத்துக்குமே பொருந்துமா?