எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கோரக்பூர், மார்ச் 15- உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந் துள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர் தல் நடை பெறவுள்ள நிலையில், இந்தத் தேர்தல் முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல் வர் சாமியார் ஆதித்யநாத் தொகுதியான கோரக் பூர் மக்களவைத் தொகுதி மற்றும் அம் மாநிலத்தின் துணை முதல்வர்  கேசவ்பிரசாத் மவுரியா தொகுதியான பூல்பூர் மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் களில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. இரு தொகுதிகளிலும் பாஜக, காங்கிரசு கட்சிகள் தனித்தனியே போட்டியிட்ட நிலை யில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் இடைத் தேர்தல் நடைபெற்ற 2 மக்களவைத் தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் போட் டியிட்ட சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள் ளது.

பீகாரில் ஒரு மக்களவைத் தொகுதிக்கும், 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், ஒரு மக்களவை மற்றும் ஒரு சட்டப் பேரவைத் தொகுதியில் லாலு பிரசாத் கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது. ஒரு சட்டப் பேரவைத் தொகுதியில் பாஜக வும் வெற்றி பெற்றுள்ளன.

உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவும், சமாஜ்வாதி கட்சியும், காங்கிரசு கட்சியும் தனித்தனியே வேட்பாளர்களைக் களமிறக்கி இருந்தன. சமாஜ்வாதி கட்சிக்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆதரவளித் தது.

உத்தரப் பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். இதனால் கோரக்பூர் மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோன்று துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவும் நாடாளுமன்ற உறுப் பினர் பதவியைத் துறந்ததால் பூல்பூர் தொகு தியும் காலியானது. இதையடுத்து, அவ்விரு தொகுதிகளுக்கும் அண்மையில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 11.3.2018 அன்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக் கப்பட்டன. இதில், கோரக்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பிரவீன்குமார் நிஷாத் 21,961 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பிரவீன்குமாருக்கு 4,56,437 வாக்குகளும், பாஜக சார்பில் போட்டியிட்ட உபேந்திர தத் சுக்லாவுக்கு 4,34,476 வாக்குகளும் கிடைத் தன. காங்கிரசு வேட்பாளர் சரிதா கரீம் 18,830 வாக்குகள் பெற்று 3- ஆவது இடத்தைப் பிடித்தார்.

இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி கைப் பற்றியுள்ள கோரக்பூர் மக்களவைத் தொகுதி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதி யாகும். அந்தத் தொகுதியில் இருந்துதான் முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 5 முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அந்தத் தொகுதியில் பெரும்பான்மை யாக வசித்து வரும், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், முஸ்லிம் சமூகத்தினர், தலித் சமூகத்தினர் ஆகியோர் சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களித்து வந்தனர். இந்நிலையில், அவ்விரு கட்சி களும் இணைந்து தேர்தலை சந்தித்தது வெற் றியை உறுதி செய்துள்ளது.

பூல்பூர் மக்களவைத் தொகுதியில், சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் படேல், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கவ்ச லேந்திரசிங் படேலை விட 59,613 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.

சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிர தாப் சிங் படேல் 3,42,796 வாக்குகளையும், கவ்சலேந்திர சிங் படேல் 2,83,183 வாக்கு களையும் பெற்றுள்ளனர். சுயேச்சை வேட் பாளரான அட்டிக் அகமது 48,087 வாக்கு களைப் பெற்று உள்ளார். காங்கிரசு வேட் பாளர் மணீஷ் மிஸ்ரா 19,334 வாக்குகள் பெற்று, 4- ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பீகார்

பீகார் மாநிலத்தில் அராரியா மக்கள வைத் தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சர்ஃப்ராஸ் ஆலம், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரதீப் குமார் சிங்கை விட கூடுதலாக 61,998 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல், ஜெகநாபாத் சட்டப் பேர வைத் தொகுதியில் அய்க்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட அபிராம் சர்மாவை, ராஷ்ட்ரீய ஜனதா தள வேட்பாளர் குமார் கிருஷ்ண மோகன் 35,036 வாக்குகள் வித்தி யாசத்தில் தோற்கடித்தார்.

இந்நிலையில், பாஜகவுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, பபுவா சட்டப் பேர வைத் தொகுதியில் அக்கட்சி வெற்றி பெற் றுள்ளது. அந்தத் தொகுதியில், பாஜக வேட்பாளர் ரிங்கி ராணி, காங்கிரசு வேட் பாளர் சாம்பு சிங் படேலை 15,490 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் நிதீஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளம் கட்சி இணைந்த பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இதுவாகும்.

வாக்கு எண்ணிக்கை மய்யத்தில்

ஆளும் பாஜகவின் அதிகார முறைகேடு

இதனிடையே, வாக்கு எண்ணிக்கை மய் யத்தில், கோரக்பூர் தொகுதியின் வாக்குகள் எண்ணப்பட்ட நேரத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றது என்று சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் நரேஷ் உத்தம் குற்றம் சாட்டினார்.

'முதல்வரின் நெருக்கடிக்கு பணிந்து, வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் மய்யத் தில் இருந்த சமாஜ்வாதி கட்சியின் முகவர் களை மாவட்ட நிர்வாகம் வெளியேற்றியது; அங்கு திரண்டிருந்த பொதுமக்களை தடியடி நடத்தி காவல் துறையினர் விரட்டினர்' என் றும் அவர் குற்றம் சாட்டினார். இதுதொடர் பாக, தேர்தல் ஆணையத்துக்கும் அவர் கடி தம் எழுதியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner