எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பா.ஜ.க. - தெலுங்கு தேசம்

கூட்டணி முறிந்தது!

 

அமராவதி, மார்ச் 16 ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசுடன் மோதல் ஏற்பட்டதால், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திரும்பப் பெறலாம் என தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.

இதனை அடுத்து, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க் கள் தங்களது மத்திய அமைச்சர் பதவியிலிருந்து கடந்த வாரம் விலகினர்.அதேபோல,ஆந் திரஅமைச்சரவையில் அங்கம் வகித்த பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் இருவர் தங்களது பதவியி லிருந்து விலகினர்.

கடந்த சில நாள்களாக இவ்விவகாரம் தொடர்பாக தனது கட்சி நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு தொடர் ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில்,பா.ஜ.கதலை மையிலானதேசியஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவ தாகவும், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் அந்தக் கட்சி அதிகாரப்பூர்வமாக தெரி வித்துள்ளது.

மேலும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம் பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர ஒய்.எஸ்.ஆர் காங்கிரசு கட்சி நோட்டீஸ் அளித்துள்ளது. இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டால், தெலுங்கு தேசம் ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

தெலுங்கு தேசமும் புதிதாக ஒருநம்பிக்கைஇல்லாதீர் மானம் கொண்டு வர தயா ராகவே உள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு!

தேர்வுக்கு முதல் நாள் இரவில் வெகுநேரம் கண் விழித்துப் படிப்பதால் தூக்கம் கெடுவதுடன், தேர்வு எழுதும் நாளில் பதற்றமும், சோம்பலும் அதிகரிக்கும்.

தெரியுமா சேதி?

1992 ஆம் ஆண்டுமுதல் 2000 ஆம் ஆண்டுவரை தமிழ்நாட்டில் 387 கோவில்களில் இருந்து 822 செப்புச் சிலைகள், 372 கல் சிலைகள் காணவில்லை - இது காவல்துறைக் கணக்கு - வழக்கு. (கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்பதற்கு வேறு என்ன ஆதாரம் தேவை?)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner