எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவிரி மேலாண்மை வாரியம்,

காவிரி நீர் முறைப்படுத்தும் குழு - இவற்றை செயல்படுத்துக!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதான தீர்மானம்

சென்னை, மார்ச் 16 தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நேற்று (15.3.2018) காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படியும், உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பின்படியும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை திறம்பட செயல்படுத்துவதற்கு, அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்பு களை ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு அமைத்து, அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தினை முன்மொழிந்தார்.

தீர்மானம் வருமாறு:

‘‘காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படியும், உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பின்படியும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை திறம்பட செயல் படுத்துவதற்கு, அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப் பிட்டுள்ள ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு அமைத்து, அவற்றை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் என்று இந்த மாமன்றம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.''

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

அரசால் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தினை ஒருமனதாக நிறைவேற்றித் தரும்படி மாண்புமிகு உறுப்பினர் களை பேரவைத் தலைவர் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் பேசினார்.

இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner