எழுத்துரு அளவு Larger Font Smaller Font

>>வங்கி லாக்கரில் நகைகளைத் திருடி போலிகளை வைத்தவரை போலீஸ் தேடுகிறது.

(வங்கி லாக்கரே பாதுகாப்பற்றதாகி விட்டதா? வேலியே  பயிரை மேய்கிறது என்பதும் இதுதானோ!).

>>பகுஜன் சமாஜ் கட்சியை உருவாக்கிய கான்ஷிராம் பிறந்த நாள் நேற்று (15.3.1934).

(தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மக்கள்தான் இந்நாட்டின் பெரும்பான்மையினர். அவர்கள் கையில்தான் ஆட்சி அதிகாரம் அமையவேண்டும் என்பதுதான் பி.எஸ்.பி.யின் சரியான நோக்கமாகும். ஆனால், இன்று பி.எஸ்.பி.?).

>>நான் இப்பொழுது ஒரு பகுதி நேர அரசியல்வாதிதான் - ரஜினிகாந்த்

(பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை என்று தமிழ் இலக்கணத்தில் வரும்; இதில் இவர் எந்த இடத்தில் வருகிறாரோ!).

>>2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை இந்தியாவிலிருந்து ஒழித்துக் கட்டுவோம்  - பிரதமர் மோடி

(அதைவிட மோசமான இந்துத்துவா நோயிலிருந்து நாடு விடுதலை ஆகவேண்டுமே!).

>>எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்காமல் நிதி மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொண்டது.

(பார்ப்பன ஆட்சியில் ஜனநாயகமாவது, வெங்காயமாவது!).

>>குஜராத் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.,க்கள் அடிதடி!

(இந்தியா முழுவதும் பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் கிரிமினல் வழக்குகளில் சிக்கிக் கொண்டுள்ளனர் என்பது செய்தி).

>>வங்கி முறையை சுத்தப்படுத்த விஷம் அருந்தத் தயார்! - உர்ஜித் பட்டேல், ரிசர்வ் வங்கி ஆளுநர்

(மோடி ஆட்சியின் நிர்வாகத்துக்கான போஸ்ட் மார்ட்டம் அறிக்கை இது).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner